சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது..!
வண்டலூர் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது
சென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது... அதன்படி, இன்று முதல் பார்வையாளர்கள் பூங்காவை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் 4 மாத காலமாகவே அதிகமாக இருந்தது.. இதனால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்பட்டன.. தொற்று பாதிப்பும் அதிக அளவுக்கு ஏற்பட்டன.
இதில் சென்னை மாவட்டம் பீதியை கிளப்பிவிட்டது.. எனவே உடனடியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது... ஏராளமான தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன..

பூங்கா
பிறகு தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்ததையடுத்து, தளர்வுகளும் ஒவ்வொன்றாக வெளி வந்தன. அப்படித்தான், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது.. மேலும் 7 சிங்கங்கள் பாதிக்கப்பட்டு தொற்றில் இருந்து மீண்டு வந்தது...

அதிகாரிகள்
இதனால் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.. கடந்த சில தினங்களாக தொற்று குறைந்துள்ளதால் உயிரியல் பூங்காக்களை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது... இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அறிவுறுத்தல்
பிறகு, பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது... அதுமட்டுமல்லாமல், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தினர்... இதை தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திறப்பு
எனினும், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், மாஸ்க் அணிவதுடன், 2 மீட்டர் தூரம் சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது... வண்டலூர் உயிரியல் பூங்கா தவிர, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா என மாநிலத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications