வேலூர் நந்தினி போல்.. சென்னை வீரலட்சுமி.. பெரும்பாக்கம் கேஸ் சிலிண்டர் ஊழியர் வழக்கில் திருப்பம்
சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு எழில் நகரைச் சேர்ந்த பழனிசாமி, ஓஎம்ஆர் சாலையில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வீரலட்சுமி.. வீரலட்சுமிக்கும், அசோக் குமார் என்பவருக்கும் திருமணத்தை மீறிய காதல் இருந்தாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து பழனிசாமிக்கு ஸ்கெட்ச் போட்டனர். அவர்களின் திட்டமிட்டு செய்த சம்பவம் அம்பலத்திற்கு வந்தது எப்படி என்று பார்ப்போம்.
இன்றைக்கு கள்ளக்காதல் விவாகரங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தஒரு வாரத்தில் மட்டுமே நிறைய கள்ளக்காதல் வழக்குகள் வந்துள்ளன. அண்மையில் வேலூரில் நந்தினி என்ற பெண், தனது கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியதாக கைதானார். அதேபோல் சென்னை பெரும்பாக்கத்தில் வீரலட்சுமி என்பவர் கைதாகி உள்ளார்.

பெரும்பாக்கம் அடுக்குமாடி
சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு எழில் நகரைச் சேர்ந்த 45 வயதாகும் பழனிச்சாமி என்பவர், சென்னை துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வீரலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் பெரும்பாக்கம் அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
பழனிச்சாமி வழக்கு
கடந்த ஜூலை 19-ந் தேதி அதிகாலை பழனிச்சாமி பெரும்பாக்கம் பேருந்து நிலையத்தில் வைத்து பழனிசாமி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சென்னை பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் சிசிடிவி மற்றும் பிற ஆதாரங்கள் அடிப்படையில் செம்மஞ்சேரியைச் சேர்ந்த 40 வயதாகும் அசோக்குமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
கள்ளத்தொடர்பு
அசாக்குமாரிடம் நடத்திய விசாரணையில், பழனிச்சாமியின் மனைவி வீரலட்சுமிக்கும், அசோக்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம். இதைக்கண்டித்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் கணவனுடன் வாழ விருப்பமில்லை என சென்னை கண்ணகி நகர் போலீசில் வீரலட்சுமி புகார் கொடுத்திருக்கிறாராம்.
காதலனிடம் புகார்
கடந்த ஜூலை 18-ந் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் பழனிசாமி, வீரலட்சுமியை முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த வீரலட்சுமி, நடந்த விவரத்தை கள்ளக்காதலன் அசோக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறாராம். அப்போது கணவர் பழனிச்சாமி தாக்கிய சம்பவம் குறித்து அழுது கொண்டே கள்ளக்காதலனிடம் கூறினாராம். இதைத்தொடர்ந்து அசோக்குமார் பழனிசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
பெரும்பாக்கம் சம்பவம்
இதன்படி பெரும்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழனிச்சாமி பைக்கில் வீட்டை நோக்கி வந்த போது அவரை மறித்து அசோக்குமார் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரை கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெரும்பாக்கம் போலீசார் கள்ளக்காதலன் அசோக்குமார், வீரலட்சுமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications