வங்கி லாக்கரில் உங்கள் பணம் நகை உள்ளதா.. சென்னை வேளச்சேரியில் நடந்த மிகப்பெரிய சம்பவம்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சுரூபாராணி சிவக்குமார் என்பவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் ரூ.20.60 லட்சம் ரொக்கப்பணத்தையும், ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் வைத்திருந்தார். வங்கி லாக்கரை அவர் அடிக்கடி சென்னை வந்து திறந்து பார்க்கவில்லை. இந்நிலையில வாடிக்கையாளரின் வங்கி 'லாக்கரில்' இருந்த ரூ.46.5 லட்சம் நகை, பணத்தை வங்கி ஊழியர் திருடியாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு பலர் வங்கிகளில் நகை, பணத்தை பாதுகாப்பாக வைக்கிறார்கள். சிசிடிவி பாதுகாப்பு, போலீஸ் பாதுகாப்பு, பல அடுக்கு பாதுகாப்பு யாரும் எளிதில் வைக்க முடியாத வகையில் தான் வங்கியில் லாக்கர் வசதிகள் இருக்கும். வீட்டில் வைக்க முடியாத நகை, பணத்தை வங்கி லாக்கரில் பலர் வைத்துள்ளார்கள். வெளிநாடு செல்லும் பலர், பணம்,நகையை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு தான் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் சென்னை வேளச்சேரி வங்கியில் நடந்த சம்பவம் வங்கியில் பணம் சேமிப்பவர்களையே அதிர வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவில் சுரூபாராணி சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் ரூ.20.60 லட்சம் ரொக்கப்பணத்தையும், ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் வைத்துவிட்டு அமெரிக்காவிலேயே வாழ்ந்து வந்தார். தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வராத காரணத்தால், வங்கி லாக்கரை அவர் அடிக்கடி சென்னை வந்து திறந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
அந்த லாக்கரை மேற்பார்வையிடும் பொறுப்பை சென்னையில் வசிக்கும் தனது தாயாரிடம் ஒப்படைத்திருந்தார். சமீபத்தில் வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது பணம் நகை, திருடு போயிருந்தது. லாக்கரில் வைத்திருந்த ரொக்கப்பணமும், நகைகளும் திருட்டுப்போனது எப்படி என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சுரூபாராணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கமல்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீஸ் விசாரணையில், லாக்கரில் இருந்த நகைகளையும், பணத்தையும் வங்கி ஊழியர் ஒருவர், திருடி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். திருடிய ரொக்கப்பணம் மீட்கப்பட்டது. திருடிய நகைகளை ரூ.21 லட்சத்துக்கு வேளச்சேரியில் உள்ள அடகு கடையில் விற்றிருப்பது தெரியவந்தது. அந்த நகைகளையும் போலீசார் மீட்டார்கள். கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோல் பொதுமக்கள் நம்பிக்கையுடன் 'லாக்கர்களில்' வைக்கும் பணம் மற்றும் நகைகளை திருடும் வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் கடுமையாக எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications