சென்னை வேளச்சேரியில் மாநகர பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. அலறிய பயணிகள்.. 7 பேர் காயம்
சென்னை: சென்னை வேளச்சேரியில் 2 மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. வேளச்சேரி தாண்டீஸ்வரம் பகுதியில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை வேளச்சேரி பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நிலையில் வேளச்சேரி தாண்டீஸ்வரம் அருகே இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

எதிர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதியதில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இதில் பஸ் டிரைவர் மற்றும் 7 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அங்கு சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்திய போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை வேளச்சேரியில் இரு மாநகர பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications