முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை
சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மதியம் 2 மணி முதல் 5:30 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கும் இந்த சோதனை ஓட்டத்தின் போது, ரயில் தண்டவாளங்களை யாரும் நெருங்கவோ அல்லது அதன் அருகில் வேலை செய்யவோ கூடாது என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் அதனை பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்தோடு இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் காலதாமதம் ஆனது. நீதிமன்ற வழக்குகளால் பணிகள் முடங்கிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரைவுபடுத்தப்பட்டு, கட்டுமான மற்றும் தண்டவாள அமைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய பணிகளும் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு சில நாட்களில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் இன்று மதியம் 1.30 மணி முதல் 6 மணி வரை இந்த சோதனை ஓட்டம் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடக்கிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது அனுமதி இல்லாத நபர்கள் யாரும் ரெயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்ய வேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தி உள்ளது.
இன்று நடைபெறும் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், விரைவில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இணைப்பு அமலுக்கு வந்தால், தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்திற்கு மாற்றுப் பாதை உருவாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் பயணிகள் நேரடியாக பரங்கிமலை வழியாக மற்ற புறநகர் பாதைகளுடன் இணைவதற்கு இது உதவும். போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தரும் போது இந்த சேவையை தொடங்கி வைக்கும் வாய்ப்பு இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட பயணத்துடன் இணைத்து தமிழ்நாட்டில் ரயில்வே தொடர்பான சில திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications