NH48 ஒரு சாபக்கேடு.. சென்னை, வேலூரை இணைக்கும் சாலையின் பரிதாப நிலை! ரூ.15,000 கோடி வேஸ்ட்?
சென்னை: சென்னை-வேலூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48ஐ மேம்படுத்த ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 13 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இன்னமும் இந்த பணிகள் முடிவடையாததால், பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சாலையாக இது மாறியிருக்கிறது. குறிப்பாக இரவில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
மதுரவாயல் - வாலாஜா வரையிலான 100 கி.மீ. 'தேசிய நெடுஞ்சாலை 48' விரிவாக்கத் திட்டம் நீண்டகாலமாகவே முடங்கிக் கிடக்கிறது. 13 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ரூ.1,500 கோடி செலவழிக்கப்பட்டும், பணி முழுமையடையாமல் உள்ளது. மோசமான பராமரிப்பும், ஆங்காங்கே காணப்படும் கட்டுமானப் பொருட்களும் இந்தச் சாலையை மிகவும் ஆபத்தானதாக மாற்றியுள்ளன.

காரணம் யார்?
சாலை விரிவாக்க பணி தாமதம் ஆவதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் என்றும் ஒப்பந்ததாரர்கள் காரணம் என்றும், மாநில அரசு தாமதிக்கிறது எனவும் மாறி மாறி குற்றம்சாட்டப்படுகிறதே தவிர, இன்னும் வேலைகள் முடிந்தபாடில்லை. இந்த சாலை விரிவாக்க பணியில் தாமதம் ஏற்படுவது இது முதல்முறை கிடையாது. தாமதம் காரணமாக கடந்த 2016-ல் முதல் ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டார். 2021-ல், ஃப்ளை ஆஷ் விநியோகப் பிரச்சனை காரணமாக இரண்டாம் ஒப்பந்ததாரர் விலகினார். ஒவ்வொரு முறையும் வேலை பாதியில் நிறுத்தப்பட்டதால், நிதிச்சுமை அதிகரித்துள்ளது.
12க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் பாதியிலேயே நிற்கின்றன. இவற்றில் 7 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 4 மேம்பாலங்கள் தயாராக இருந்தும் திறக்கப்படாமல் உள்ளன. மற்றவை தூண்களுடன் அப்படியே கைவிடப்பட்டிருக்கின்றன. இது போக்குவரத்து நெரிசலையும், ஓட்டுநர்களுக்கு ஆபத்தான நிலைமைகளையும் உருவாக்குகிறது.
கேள்வி எழுப்பும் பயணிகள்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் சுங்கக் கட்டணமாக ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளனர். ஆனால், சாலைகள் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளன. வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில், தங்கள் பாதுகாப்பை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. காசு வாங்கிக்கொண்டு ரோடு போடாமல் இருப்பதை பற்றி கேள்வி கேட்காமல் இருக்க முடியாது" என்று கூறுகின்றனர். சுங்குவார்சத்திரம், நந்திமேடு, முருக்கந்தாங்கல், அட்டுப்புத்தூர், வேடல் போன்ற பகுதிகளில் கட்டுமான பணிகளால் உருவான தூசி, அந்த வழியாக பயணிப்போரை மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு உள்ளாக்கியுள்ளது.
கட்டி முடிக்கப்படாத பாலங்கள்
வாலஜா அருகே, வாகன ஓட்டிகள், முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தை பயன்படத்த தொடங்கியிருக்கின்றனர். இந்த பாலங்களில் ஆங்காங்கே கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இது விபத்துக்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட, சர்வீஸ் சாலையில் பயணிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்கள் இந்த வழியாக பயணிக்க தொடங்கியுள்ளன.
பணிகளை மீண்டும் தொடங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறுப்புகளைப் பிரித்து, 30 கி.மீ. தூரத்தை தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கும், 36 கி.மீ. தூரத்தை ஒரு புதிய ஒப்பந்ததாரருக்கும் வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர் தரப்பு குறைந்த அளவில் மட்டுமே வேலைகளை முடித்திருக்கிறது. இதனால், சுமார் 20 கி.மீ. தூரம் மோசமான நிலையில் உள்ளது.
விடிவுகாலம் எப்போது?
பூந்தமல்லிக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் இடையே புதிதாகப் போடப்பட்ட சாலை கூட 10 கி.மீ. தூரத்திற்கு குண்டும் குழியுமாக மாறியிருக்கிறது. கனரக வாகனங்கள் குறுகிய சாலைகளில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சென்னை துறைமுகத்திற்கு வரும் பொருட்கள் பெங்களூருக்கு போக வேண்டும் எனில் இந்த பாதை மட்டும்தான் இருக்கிறது. இதுவே பிரதான பாதை. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications