ஆலந்தூர் டூ கிளாம்பாக்கம் சுரங்கப்பாதை.. ஒரு மணி நேரத்தில் விழுப்புரம்.. ஆரம்பிக்கும் ஆர்ஆர்டிஎஸ்
சென்னை : சென்னை மற்றும் விழுப்புரம் இடையே ஆர்ஆர்டிஎஸ் (அதிவேக) ரயில் போக்குவரத்து முன்மொழியப்பட்டுள்ளது. பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் தயாரித்துள்ள இந்த அறிக்கையின்படி, ஆலந்தூர் - விழுப்புரம் வழித்தடமே சிறந்த தேர்வாக இருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூர் - விழுப்புரம் இடையே ஆர்ஆர்டிஎஸ் தொடங்கப்பட்டால் பயண நேரம் 4 மணி நேரத்தில் வெறும் ஒரு மணி நேரமாக குறையும்.
சென்னை மற்றும் விழுப்புரம் இடையே மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பிற்கான (RRTS) இறுதி சாத்தியக்கூறு அறிக்கை பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் தயாரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை இணைக்க ஆலந்தூர் - விழுப்புரம் வழித்தடமே சிறந்த தேர்வாக இருக்கும் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இத்திட்டத்தின் மதிப்பீடு சுமார் ₹75,000 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் குறையும்
இந்த RRTS திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், இரு மாவட்டங்களுக்கு இடையேயான பயண நேரம் 4 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாகக் குறையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் ஆர்ஆர்டிஎஸ் ரயில் போக்குவரத்து தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட மற்ற மாற்று வழித்தடங்களை விட, ஆலந்தூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பரிந்துரை அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்டிஎஸ் தொடங்கப்பட்டால், 2032-ஆம் ஆண்டிற்குள் தினசரி பயணிகள் எண்ணிக்கை 2.18 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
திட்டமிடப்பட்டுள்ள வழித்தடம்:
சென்னை மற்றும் விழுப்புரம் இடையே ஆர்ஆர்டிஎஸ் வழித்தடம் ஆலந்தூர் பகுதியில் தொடங்கி, சென்னை சர்வதேச விமான நிலையம், தாம்பரம், கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் திண்டிவனம் வழியாகச் சென்று விழுப்புரத்தில் முடிவடைகிறது.
விழுப்புரம் ஆர்ஆர்டிஎஸ்: ஒரு பெரிய பொருளாதார வழித்தடம்
விழுப்புரம் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தில் புதுச்சேரி மற்றும் கடலூரை இணைக்கும் கிளை வழித்தடமும் சேர்க்கப்பட்டுள்ளது. 64.1 கி.மீ நீளமுள்ள இந்தக் கிளை வழித்தடத்தையும் சேர்த்து, மொத்த ரயில் வழித்தடத்தின் நீளம் சுமார் 146 கி.மீ ஆக இருக்கும். 180 கி.மீ நீளம் வரையிலான நடுத்தர தூர பயணத்திற்காகவே ஆர்ஆர்டிஎஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மணிக்கு 300 கி.மீ வேகம் வரை செல்லும் வகையிலும் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையிலேயே வெறும் ஒரு மணி நேரத்திலேயே விழுப்புரம் போக்கூடிய அளவிற்கு ஆர்ஆர்டிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் அதனைவிட குறைவான நேரத்தில் போக முடியும்.
ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போனது ஏன்.. அறிய வேண்டிய சந்தேகங்கள்
சுரங்கப்பாதை
சென்னை நகருக்குள், அடர்த்தியான வளர்ச்சி மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக, ஆலந்தூர் முதல் கிளாம்பாக்கம் வரை இந்த வழித்தடம் முழுமையாகச் சுரங்கப்பாதை வழியாக அமையத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிளாம்பாக்கத்திற்குப் பிறகு, இது மேம்பாலம் மற்றும் கலப்பு வழித்தடங்களாக ஜி.எஸ்.டி சாலை மற்றும் சென்னை - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையை ஒட்டி அமையும்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
வியூக ரீதியாக, இந்த வழித்தடம் தமிழகத்தின் தெற்குப் பகுதிக்கான வளர்ச்சி முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது. இது தேசிய நெடுஞ்சாலை-45 இல் நிலவும் நெரிசலைக் குறைப்பதோடு, பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைக்கவும் , சுற்றுச்சூழலுக்கு உகந்த பிராந்திய இயக்கத்தை உறுதி செய்யவும் நிச்சயம் உதவும். மக்கள் செயற்கைக்கோள் நகரங்களில் வசித்துக்கொண்டு, பெருநகரங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதற்கும் இத்திட்டம் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு சூப்பராக மாறுது
செங்கல்பட்டு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு மையமாகவும், விழுப்புரம் குடியிருப்பு, கல்வி மற்றும் வணிக மையமாகவும் வளர்ந்து வருவதால், சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் ஆகியவை இணைந்து ஒரு ஒருங்கிணைந்த நகர்ப்புற-பொருளாதார வழித்தடமாக உருவாகும்.
இரவில் சரக்கு ரயில்
மேலும், இந்தச் சாத்தியக்கூறு அறிக்கையில் இரவு நேரங்களில் சரக்கு போக்குவரத்து (Freight operations) மேற்கொள்ளவும் பரிந்துரை செய்து உள்ளது. இதன் மூலம் இது வெறும் பயணிகள் போக்குவரத்துக்கான அமைப்பாக மட்டுமில்லாமல், ஒரு பன்நோக்கு பொருளாதார வழித்தடமாக அமையும். இது இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத் இலக்குகளுடன் ஒத்துப்போவதோடு, போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் (தற்போது ஜிடிபியில் 13-14%), உள்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது.
160 கிமீ வேகம்
ஆலந்தூர் ஆர்ஆர்டிஎஸ் ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' கொள்கையின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டெல்லி - மீரட் வழித்தடத்தைப் போன்றதாக இருக்கும். இத்திட்டத்தில் நின்று கொண்டு பயணம் செய்யும் வசதியுடன் கூடிய எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் (Eight-car rake) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மணிக்கு 300 கி.மீ வேகம் வரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு அம்சங்கள்:
சென்னை ஆலந்தூர் டூ விழுப்புரம் வெறும் ஒரு மணி நேரத்தில் போகலாம்
மணிக்கு 300 கிமீ வேகம் வரை எதிர்காலத்தில் ரயில் போகும்
கடலூர் வரை பாதை இணைக்கப்படுவதால் கடலூர் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
எல்லாரும் சென்னையில் போய் குடியேற வேண்டிய அவசியம் குறைந்துவிடும்
செங்கல்பட்டு மிகப்பெரிய வேலைவாய்ப்பு மையமாக உருவெடுக்கும்
முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications