Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போனது ஏன்.. அறிய வேண்டிய சந்தேகங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் அரசு ஒரே தவணையில் போட்ட பின்னர், பலருக்கும் சந்தேகங்கள் எழுந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.. அதேபோல் ஒரே குடும்ப அட்டையில் மாமியார் மருமகள் என இரண்டு குடும்பங்கள் உள்ளன. மகளிர் உரிமை தொகை அவர்களுக்கும் கிடைக்காமல் உள்ளது. மகளிர் உரிமை தொகை யாருக்கு எல்லாம் கிடைக்காமல் உள்ளது. மக்கள் அறிய வேண்டிய சந்தேகங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த போது சுமார் 1.60 கோடி பேர் விண்ணப்பத்தார்கள். ஆனால் அதில் சுமார் 1 கோடி பேருக்கு தான் வழங்கப்பட்டது. சுமார் 50 லட்சத்திற்கு மேல் விண்ணப்பங்கள் அப்போது நிராகரிக்கப்பட்டது.

Why did one crore women not receive the magalir urimai thogai Doubts people need to know

மகளிர் உரிமை தொகை ஏன் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஒவ்வொருவராக இசேவை மையத்தில் சென்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பொறுமையாக அவர்களும் பதில் அளித்தார்கள். அந்த சந்தேகங்கள் இப்போது பலருக்கு எழுந்துள்ளது. ஏனெனில் இன்னமும் ஒரு கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவே இல்லை..

வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு இல்லை

ஏன் கிடைக்கவில்லை. என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம். அரசு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை என்று கூறியது. இந்த கூற்றில் ஓரளவே உண்மை உள்ளது. அப்படி எல்லாரையும் அரசு நிராகரிப்பது இல்லை.. உண்மையை இதில் தெளிவாக சொல்வது என்றால், குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால், அம்மா, அப்பா, மகன், மகள், மருமகள் என குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள யாராவது ஒருவர் வருமான வரி கட்டினால் அல்லது தாக்கல் செய்தால் கண்டிப்பாக அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது.

பிடிஆர் செய்த சம்பவம்

ஏனெனில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த போது, தகுதி என்ற வரையறையே இதைத்தான் முதலில் செய்தார். இதற்கான டேட்டாக்களை மத்திய அரசிடம் இருந்தும் வாங்கிவிட்டார். இதன்படி குடும்ப அட்டையில் உள்ள யாராவது ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தாலும் சிஸ்டம் ஆட்டோ மேட்டிக்காக கண்டுபிடித்து ஆரம்ப நிலையிலேயே வடிகட்டிவிடும். ஏனெனில் குடும்ப அட்டையில் உள்ள அனைவரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து தான் கண்டுபிடித்து விடுகிறது.

கார் வைத்திருந்தால் கிடையாது

அதேபோல் குடும்பத்தில் யாராவது ஒருவரிடம் நான்கு சக்கர வாகனங்கள் அல்லது அதற்கு மேல் சக்கரம் உள்ள வாகனங்கள் இருந்தாலும், அதாவது கார் உள்ளிட்ட வாகனங்கள் இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமை தொகை கிடையாது. அப்பா, அப்பா தனியாக வீட்டில் வசிப்பார்கள், மகன் அல்லது மகள் பெயர் ரேஷன் கார்டில் இருக்கும். மகன் அல்லது மகள் கார் வாங்கியிருந்தால் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது. இதனையும் பிடிஆர் உருவாக்கிய சிஸ்டம் வடிகட்டிவிடும். எளிதாக கண்டுபிடித்து ஆட்டோமேட்டிக்காக நிராகரித்துவிடும்.

மின் நுகர்வு

அதேபோல் ஒரு குடும்பத்திற்குச் சொந்தமாக 5 ஏக்கருக்கும் குறைவான நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவான புஞ்சை நிலம் மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல் வீட்டு உபயோக மின் நுகர்வு ஆண்டுக்குச் சராசரியாக 3,600 யூனிட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒருவேளை அதிகமாக இருந்தால் பிடிஆர் உருவாக்கிய சிஸ்டம் வடிகட்டிவிடும். எளிதாக கண்டுபிடித்து ஆட்டோமேட்டிக்காக நிராகரித்துவிடும். ஏனெனில் இதன் பின்னால் உள்ள அரசின் டேட்டா தான் காரணம். ஒருவரின் ஆதார் தகவல்களை வைத்து அரசு எளிதாக கண்டுபிடித்துவிடும்.

ஏழைகளுக்கு சிலருக்கு கிடைக்கவில்லை

இறுதியாக இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.. அது கொஞ்சம் கடினமான முடிவு என்றாலும், அதுவும் நடக்கிறது. முதியோர் உதவி தொகை வாங்கும் ஏழைகள் மற்றும் விதவையர் உதவி தொகை வாங்கும் ஏழை குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.

முதியோர் உதவி தொகை

ஏனெனில் அரசு ஒருவருக்கு ஒரு உதவி தொகை என்ற கொள்கையை கடைபிடிப்பது தான் காரணம். அதேநேரம் கணவன் முதியோர் உதவி தொகை வாங்கி, மனைவி வாங்கவில்லை என்றால், மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. குடும்பத்தில் எந்த வருமானமும் இன்றி, வசிக்கும் முதியோர்கள் இதில் பயன்பெறுகிறார்கள். அதேநேரம் மாற்றுத்திறனாளி உதவி தொகை பெறும் குடும்பத்தினருக்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்து, மகளிர் உரிமை தொகை வழங்குகிறது.

தனி ரேஷன் கார்டு வாங்க வேண்டும்

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், புதிதாக மகளிர் உரிமை தொகை பெற சில விஷயங்களை கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தினரும் செய்ய வேண்டும். அதன்படி அப்பா அம்மாவிற்கு எந்த உதவி தொகையும் இல்லை என்றால், அவர்கள் தனி கார்டாகவும், மகன், மருமகள் தனி ரேஷன் கார்டாகவும் மாற்றினால் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.அதேநேரம் மகன் மருமகள் ரேஷன் கார்டு வாங்கினாலும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள், கார் இல்லாதவர்களாக இருந்தால் உரிமை தொகை கிடைக்கும்.

21 வயது நிரம்பி இருக்க வேண்டும்

மகன் மகள் அல்லது மருமகள் கார் வைத்திருந்தால் அல்லது ஐடி பைலிங் செய்திருந்தால் அவர்கள் குடும்ப அட்டையில் பெயரை நீக்கி தனி கார்டு பெற வேண்டும். அப்படி பெற்றால் வயதானவர்கள் தனி கார்டாக மாறிவிடும். அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியும். அதேநேரம் விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 21 வயதிற்கு கீழ் பெண்கள் திருமணம் ஆகியிருந்தாலும் மகளிர் உரிமை தொகை பெற 21 வயது வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் தனி கார்டு வாங்கி கொள்வது நல்லது அப்படி இருந்தால் தான் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். மேலும் தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+