Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 வயசில் விபச்சாரம்.. அசிங்கப்பட்ட லதா.. சென்னை விருகம்பாக்கம் அப்பார்ட்மென்ட்டில் நுழைந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், ஸ்பா, சலூன்களில் விபச்சாரம் நடப்பதாக வரும் தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனைகளை அவ்வப்போது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்தவகையில், அப்பார்ட்மென்ட் ஒன்றில் விபச்சாரம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆங்காங்கே முறையான அனுமதி இல்லாமல், அல்லது ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தும் அதற்கு முறையான லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா சலூன் என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் பல இயங்கி வருகின்றன.

Chennai prostitution Virugambakkam

வறுமையில் சிக்கும் இளம்பெண்கள்

குடும்ப சூழ்நிலை, வறுமை, வேலையில்லா பிரச்சனை போன்றவை காரணங்களால், எத்தனையோ அப்பாவி பெண்கள், இதுபோன்ற மசாஜ் சென்டர்களில் சிக்கி கொள்கிறார்கள்..

அதேபோல, நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி, சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, சென்னை போன்ற நகரங்களுக்கு இளம்பெண்களை அழைத்து வந்து, ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சில புரோக்கர்கள் விற்றுவிடுகிறார்கள். சில வடமாநில பெண்களும் இங்கு வந்து சிக்கி கொள்கிறார்கள். எனவேதான், தமிழக போலீசார், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மசாஜ், ஸ்பா சென்டர்களில் அடிக்கடி ரெயிடு நடத்தி வருகின்றனர்.

சலூன்களில் அதிரடி சோதனை

அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானால், சம்பந்தப்பட்ட ஸ்பா உரிமையாளரை கைது செய்து ஜெயிலில் அடைத்து, அங்குள்ள இளம்பெண்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும், முறைகேடாக செயல்படும் ஸ்பா சென்டர்களை இழுத்து மூடி சீல் வைத்தும் வருகின்றனர்.

அந்தவகையில், சென்னையிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.. கடந்த வாரம் கீழ்பாக்கம் பகுதியில், ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்பா மற்றும் சலூனை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இறுதியில், விஜயகுமார் என்பவரை கைது செய்து, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 9 பெண்களையும் போலீசார் மீட்டிருந்தனர்.

வளசரவாக்கத்தில் விபச்சாரம்

இந்நிலையில், விருகம்பாக்கம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக, சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. இங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது குறித்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

அதில், "சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (25.02.2025) விருகம்பாக்கம், சாய்பாபா காலனி 3வது தெருவிலுள்ள உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

லதாவுக்கு இது தேவையா

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய வளசரவாக்கம் சுபமங்களம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லதா (50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட எதிரி லதா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+