கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறும் சென்னை விஐடி..பரவும் வேகம் அதிகம் - மா.சுப்ரமணியன் எச்சரிக்கை
சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளதாகவும் கொரோனா பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுவருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 44 பேர் , செங்கல்பட்டில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவல் வேகம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்தது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஐடியில் அதிகரிக்கும் கொரோனா
இந்த நிலையில் சென்னை ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை விஐடியில் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பிஏ2 வகை
கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். உணவு அரங்கு , விடுதி அறை என அனைத்திலும பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கொரோனா பாதித்தவர்களில் 99% பெரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications