சென்னையில் காளிபிளவர் பக்கோடா சாப்பிட்டதும் வாயில் நுரை தள்ளி பெண் பலி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலிபிளவர் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் வாயில் நுரைத்தள்ளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரிதா திடீரென வாந்தி எடுத்ததை அடுத்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரிதா. இவர் அங்குள்ள ஒரு கடையில் காலிபிளவர் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த அந்த பெண்ணுக்கு வாயில் நுரை தள்ளியது.

chennai cauliflower pakoda

இதையடுத்து அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளி வந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என சொல்லப்படுகிறது. அண்மைக்காலமாக சிக்கன் கிரேவி சாப்பிட்டு பலி, சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பலி என செய்திகள் வந்தன.

அது போல் பிட்சாவில் கெட்டு போன பன்னீர் வைத்ததால் வயிற்று போக்கு, துர்நாற்றம் வீசிய கேக் சாப்பிட்டு சிறுவன் பலி போன்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளோம். அது போல் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஷவர்மா கடைக்கு பூட்டு போடப்பட்டது.

அது போல் சில நாட்கள் ஷவர்மாவை சிலர் சாப்பிடாமலேயே இருந்தனர். அது போல் கோயில் திருவிழாவில் கிடைத்த கறியை பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்டதால் ஒருவர் பலியான சம்பவம் ஹைதராபாத்தில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் வேளாணியை சேர்ந்தவர் சத்தியராஜ், டிரைவர். இவரது மூன்றாவது மகன் தேவதர்ஷனின் முதல் பிறந்த நாள் விழாவில் அசைவம் சாப்பிட்ட 60 வயது கருப்பையா என்பவர் மரணமடைந்தார்.

கடந்த ஆண்டு மதுரவாயல், நுாம்பல் பகுதியைச் சேர்ந்தவர் சுவேதா. தனியார் பள்ளி ஆசிரியை. போரூரில் உள்ள சர்ச்சிற்கு சென்றுள்ளார். பின், அங்கே அருகில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு, வீடு திரும்பி உள்ளார். பின், வீட்டில் மீன் குழம்பு உணவு சாப்பிட்டு இரவில் துாங்கியுள்ளார். அப்போது, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அவரை மீட்டு, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இப்படியாக உணவு பொருட்களின் தரத்தை பற்றி கவலைப்படாமல் காசு ஒன்றையே குறியாக நினைத்து ஹோட்டல் நடத்தும் சிலரால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+