சென்னையில் பிரபல பியூட்டி பார்லரில் மூலிகை சிகிச்சை.. ஜெயந்திக்கு பறிபோன காது.. நீதிமன்றம் அதிரடி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காதில் உள்ள ஓட்டையின் அளவை குறைக்க, ஒரு பிரபல பியூட்டி பார்லர் சென்று மூலிகைச் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அதற்கு பயன்படுத்திய மருத்தில் கெமிக்கல் அதிகமாக இருந்ததால், காது இரண்டும் பறிபோனது. இதையடுத்து அந்த பியூட்டீசியனுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அழகு நிலையத்திற்கு சென்னை வடக்கு நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தார். இவர் காதில் கம்மல் அணிவதற்கு போடப்பட்ட ஓட்டையின் அளவு பெரிதாக இருந்துள்ளது. இந்த ஓட்டையின் அளவை குறைப்பதற்கு விரும்பியுள்ளார். அதற்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல ஹெர்பல் பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு பார்லர் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி, காதில் கம்மல் அணிவதற்காக உள்ள ஓட்டையின் அளவைக் குறைக்க 'எளிய மூலிகைச் சிகிச்சை' செய்ய முடியும் என்று நம்பிக்கை கூறியுள்ளார்.

அதற்கு 2000 கட்டணம் என்று கூறியுள்ளார். அந்த கட்டணத்தை ஜெயந்தி செலுத்தியுள்ளார். தொடர்ந்து பார்லர் உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயந்திக்கு மூலிகை சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட மூலிகை மருந்து கலவையால் ஜெயந்திக்குக் காது மடல்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது இரு காது மடல்களும் கிழிந்து தொங்கி இருக்கின்றன.
தொடர்ந்து மேக்கப் ஆர்டிஸ்ட் ஜெயந்தி, மருத்துவமனைக்கு சென்றுள்ளார், மருத்துவர்கள் ஆய்வு செய்ததில், அந்த 'மூலிகைக் கலவை' என்பது, ட்ரைகுளோரோஅசெட்டிக் அமில என்ற அரிக்கும் தன்மை கொண்ட ரசாயனம் என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் காது மடலில் பரவிய ற்று பரவுவதைத் தடுக்க, ஜெயந்தியின் இரு காது மடல்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.
இதையடுத்த புகாரின் பேரில் ஜெயந்திக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காக பார்லர் உரிமையாளர் மீது போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரம் மேக்கப் ஆர்ட்டிஸ்டான ஜெயந்தி, தனது தோற்றம் மாறியதால் வாடிக்கையாளர்களை போய் சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேக்கப் போட ஜெயந்தியை யாரும் அணுக மறுத்தனர். இதனால் அவரது வருமானமும் குறைந்தது. அவரது குழந்தைகள் கூட காது மடல்கள் இல்லாத ஜெயந்தியின் புதிய தோற்றத்தைப் பார்த்து ஒதுங்கி உள்ளார்கள்.
இதனால் நொந்து போன ஜெயந்தி, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பார்லர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த குறைதீர் ஆணையம், அழகு நிலைய உரிமையாளர் முறையான அனுமதி இல்லாமல் இந்தச் சிகிச்சையைச் செய்ததால், என்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட ஜெயந்திக்கு ₹5 லட்சம் இழப்பீடும், ₹5,000 வழக்குச் செலவுகளும் சேர்த்து 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதில் அறிய வேண்டியது என்னவென்றால், ₹2,000 கொடுத்து 'மூலிகைச் சிகிச்சை' செய்த ஜெயந்திக்கு ₹5 லட்சம் இழப்பீடு கிடைக்க போகிறது. ஆனால் அவர் காதுகளை இழந்துள்ளார். இதுபோன்ற சிகிச்சைகளை மருத்துவமனைகளில் தான் மேற்கொள்ள வேண்டும். அழகு நிலையங்களில் பருக்களை அகற்றுவது, ஓட்டைகளை அடைப்பது, தோல் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், அதற்கு மருத்துவர்களை அணுகுவதே நல்லது ஆகும்.












Click it and Unblock the Notifications