சென்னை மக்களுக்கு குஷி.. இனி சாலையில் டிராஃபிக்கே இருக்காது.. வந்தது அதிரடி மாற்றம்! என்னனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

சமீபத்தில் எஸ்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்யும் முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

Chennai wont have any more traffic in the roads : Massive change comes

சென்னை உள்ளிட்ட தரக்கூடிய ஒன்றாக பல இருப்பது மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் போக்குவரத்து நெரிசல். குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார்.

ஆய்வு: இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் அவர்கள் மண்டலம் வாரியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூன்றாவது ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான போக்குவரத்து குறித்தும், நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.

என்ன பேசினார்கள்?: இக்கூட்டத்தில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் ஆகிய துறைகள் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு அறிவுறுத்தினார்கள். முடிக்குமாறு மேலும், மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் துறை, உதவி செயற் பொறியாளர், நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கள ஆய்வு செய்து போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

பணி மேற்கொள்ளும் இடங்களில் தடுப்பரன்கள் (barricading) தக்க வடிவமைப்புடன் மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் மேற்கொண்டு வரும் தடுப்பரன் போன்று அமைய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். காவல் துறை ஆணையர் அவர்கள் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வாகனங்கள் சீராக செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்கள்.

மழை நீர் பணிகள்: ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 10 மழைநீர் வடிகால் பணிகளில் 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
நீர்வள ஆதார துறை அனைத்து வெள்ளத் தடுப்பணைகளை வரும் பருவ மழைக்கு முன்னர் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், பருவ மழைக்கு முன் முடிக்கமுடியாத மழைநீர் வடிகால் பணிகளை Disposal point லிருந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து துறைகளும் அவர்கள் மேற்கொண்டுவரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் அறிவுறுத்தினார்கள்.

15.10.2023க்குள் முடிக்க வேண்டும் என்றும், இறுதியாக அனைத்துத் துறைகளும் சாலைப்பணிகளையும், மழைநீர் வடிகால் பணிகளையும் பருவ மழை தொடங்கும் முன் விரைவாக முடித்து சீரான போக்குவரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+