சதீஷுக்கு இதே வேலைதான்.. பெண்களை குறி வைத்து.. தெரு தெருவாக சுற்றுவது.. "பின்னாடி" தட்டுவது!
பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்
சென்னை: ரோட்டில் எந்த பெண்ணை பார்த்தாலும், அந்த இடத்தில் தட்டுவதுதான் சதீஷ்குமாருக்கு ஹாபி.. இதற்காகவே பைக்கை எடுத்து கொண்டு தெரு தெருவாக சுற்றி வருவாராம்.. இப்போது புழலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்!
சென்னையை அடுத்த நங்கநல்லூர் டிஎன்ஜிஓ. காலனியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு இளைஞர் வந்தார்.

இளம்பெண்ணை கடந்து சென்ற அவர், திரும்பவும் பைக்கை திருப்பி வந்து, அந்த பெண்ணின் பின்புறத்தை தட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டார்.. அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த இளைஞர் பைக்கிலேயே வேகமாக தப்பிச்சென்றுவிட்டார்.
ஆனால் அந்த இளைஞரை ஏற்கனவே ஒருசிலர் பார்த்திருப்பாக கூறினர்.. இந்த சமயத்தில், அதே பகுதியில் இன்னொரு பெண் நடந்து சென்றுள்ளார்.. அங்கேயும் அந்த பெண்ணின் பின்புறத்தை தட்டினார் இளைஞர்..இதை பார்த்த பொதுமக்கள் விரட்டி சென்று இளைஞரை மடக்கி பிடித்தனர்.. பழவந்தாங்கல் போலீசிலும் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, இளைஞர் பெயர் சதீஷ்குமார்.. வயது 30 என்பது தெரியவந்தது.. மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவைச் சேர்ந்தவராம்.. கம்ப்யூட்டர் என்ஜினீயராம்.. ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வருகிறார்.. கல்யாணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.. மனைவி, குடும்பம் என வாழ்ந்து வந்தாலும், இப்படி பெண்களின் பின்பக்கத்தை தட்டுவதுதான் இவரது ஹாபியாம்!
அதற்காகவே பைக்கை எடுத்து கொண்டு தெரு தெருவாக சென்றிருக்கிறார்.. நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் ரோட்டில் செல்லும் இளம்பெண்களின் பின்புறத்தை இவர் பல முறை தட்டி, அவர்களிடம் தரக்குறைவாக நடந்துள்ளதாக விசாரணையில் ஒப்புக் கொண்டார்.. இப்போது சதீஷ்குமார் கைதாகி புழலில் உள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications