Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தம்பி.. வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. என்னா ஒரு மிரட்டல்.. சிக்கிய கார்த்திகேயன்!

நெல்லை இளைஞரை மிரட்டிய நபர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! - வீடியோ

    சென்னை: "தம்பி.. நாங்க வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோவை பார்க்கறீங்க?" என்று நெல்லை இளைஞரை போலீஸ் என்று கூறி மிரட்டிய நபர் மீது 5 வழக்குகள் பதிவாகி உள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சில தினங்களுக்கு முன்பு, ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.

    ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

    ஆபாச வீடியோ

    ஆபாச வீடியோ

    இந்நிலையில், நெல்லையில் உள்ள மூன்றடைப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் காலேஜில் படிக்கும் மாணவர்கள், காட்டுப் பகுதிக்குச் சென்று ஆபாச வீடியோக்களை பார்த்து வருவதாக புகார் எழுந்தது. கும்பலாக செல்வதால்,சமூக விரோதக் குற்றங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த சமயத்தில்தான், 3 நாட்களுக்கு முன்பு, கல்லூரி மாணவரை போனில் போலீஸ் ஒருவர் மிரட்டும் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்மன் வரும்

    சம்மன் வரும்

    அந்த ஆடியோவில் ''தம்பி.. ஏற்கனவே நாங்க வார்ன் பண்ணி இருக்கோம்.. திரும்பவும் இந்த மாதிரி வீடியோவை பார்த்தீங்கன்னா என்ன அர்த்தம்.. உன் அப்பா நம்பரை கொடு.. நாளைக்கு சம்மன் வரும்.. 7 ஆயிரம் ரூபாயை போய் கோர்ட்டில் ஃபைன் கட்டு" என்கிறார். அதற்கு பதில் அளித்த இளைஞர் "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க சார்.. வெறும் 15 நிமிஷம்தான் வீடியோ பார்த்தேன்" என்கிறார்.. இப்படி ஒரு ஆடியோதான் வைரலானது.

    கூடுதல் டிஜிபி

    கூடுதல் டிஜிபி

    குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு போலீசாரே நேரடியாக போன் செய்து பேசிய இந்த ஆடியோ விவகாரம் கடும் பரபரப்பை தந்தது. இந்த ஆடியோ பின்னணியில் போலீசாரின் மைக் சத்தமும் கேட்டது ஆனால், இதுகுறித்து கூடுதல் டிஜிபி ரவி உடனடி விளக்கம் தந்தார்.

    எஸ்பி உத்தரவு

    எஸ்பி உத்தரவு

    "ஆபாசப் படம் பார்ப்பவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அதில் 3,000 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களை விசாரணைக்கு அழைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமே தவிர போனில் யாரும் மிரட்டப்பட மாட்டார்கள்" என்றார். அப்படியானால், போனில் 7 நிமிடத்துக்கு இளைஞரை மிரட்டியது யார்? போலீஸ் பெயரை ஏன் பயன்படுத்தினார் என்ற சந்தேகம் எழுந்தது. மாவட்ட எஸ்பி-யின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படவும், உடனே இதை பற்றி விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

     கார்த்திகேயன்

    கார்த்திகேயன்

    அதனடிப்படையில், மூன்றடைப்பு போலீசார் துப்பு துலக்கி மிரட்டிய அந்த நபரையும் கண்டுபிடித்து விட்டனர்.. சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர்தான் கல்லூரி மாணவரை மிரட்டி உள்ளார்.. 385 ஐ.பி.சி. மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் மிரட்டல் நபரான கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை

    தனிப்படை

    அவரை கைது செய்யவும், போலீசார் சென்னை வந்துள்ளனர். ஆனால் கார்த்திகேயன் பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு தனிப்படை விரைந்துள்ளது.. கார்த்திகேயன் போன் நம்பரை வைத்து துப்பு துலக்கியும் வருகிறார்கள். இன்று இரவு அல்லது நாளை கார்த்திகேயன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+