மது போதையில் மேற்கூறையில் இருந்து டைவ்... மண்டையை உடைத்த நபர்
சென்னை : சென்னை அம்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர் மது போதையில் தனியார் நிறுவனத்தின் மேற்கூரையின் மீது ஏறி தலை கீழாக டைவ் அடித்ததில் மண்டை உடைந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலையில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு மது போதையில் சுற்றி திரிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், நிறுவனத்திற்குள் புகுந்து, 25 உயரம் கொண்ட மேற்கூறையில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பதறிப்போன அங்கிருந்த சிலர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய அந்த நபர் மேற்கூறையின் இருபுறமும் மாறி மாறி சென்று தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த நபரை கீழே இறங்கி வருமாறு கூறிகொண்டிருந்த நிலையில் அந்த நபர் திடீரென மேற்கூரையிலிருந்து துணியால் கண்ணை மூடிக்கொண்டு கவுண்டமணி காமெடி பாணியில், தலை கீழாக டைவ் அடித்தார். இதில் அங்கிருந்த மற்றொரு அடுக்கு சீட் மீது விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடியவரை, உடனடியாக மீட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினரிடம், தீயணைப்பு காவல்துறையினர் ஒப்படைத்தனர். உடனடியாக காவல்துறையினர் 108 அவசர ஊர்தி மூலம், மதுபோதையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு - விசாரணை
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுபோதையில் தற்கொலைக்கு முயன்ற அந்த ஆசாமி யார்? எங்கிருந்து வந்தார்? வெளிமாநிலத்தவரைச் சேர்ந்தவரா? என்ற கோணத்தில் தீவிரமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் தனியார் நிறுவனத்தின் மேற்கூறையின் மீது ஏறி, தற்கொலைக்கு முயன்று, தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் பேராடிய அந்த நபரால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications