காதல் வெற்றிக்காக மது விருந்து... நண்பர்கள் இடையே தகராறில் இளைஞர் கொலை
சென்னை: ஆவடி அருகே குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்பப்டட இளைஞர் மதுபோதையில் நண்பர் ஒருவரால் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் டைல்ஸ் ஒட்டும் பணியினை அப்பகுதியில் மேற்கொண்டு வந்துள்ளார்.

அண்மையில் இவருடைய நண்பர் சாம் சித்ரவேல் என்பவரின் காதல் வெற்றிக் கொண்டாட்டத்தில் 8 பேருடன் மகேஷ் பங்கேற்றுள்ளார்.
தண்ணீர் தொட்டி அருகே நடந்த மது விருந்தில், நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக மது அருந்தி உள்ளனர். அப்போது மகேஷ் செல்போனில் வீடியோ ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் அருகில் இருந்த 17 வயது இளைஞன், அதனை எட்டி பார்த்துள்ளான். அப்போது மகேஷ்க்கும், அந்த சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், 17 வயது சிறுவன், மகேஷை தாக்கி தண்ணீர் தொட்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டதால் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த நண்பர்கள் மகேஷை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து வந்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மகேஷின் பெற்றோர் அவரை காணவல்லை என புகார் அளித்தனர். இதையடுத்து குடிபோதையில் மகேஷ், தண்ணீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்து இறந்து இருக்கலாம என கருதி உடலை மீட்டு விசாரித்தனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பின்னர் மகேஷ் கொல்லப்பட்டதை அறிந்த போலீசார் 17 வயது இளைஞனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications