ஆக்டிவ் கேஸில் தண்டையார் பேட்டை முதலிடம்.. அதிர வைக்கும் சென்னை கொரோனா நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6288 பேருக்கும் தண்டையார் பேட்டையில் 5116 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஜூன் 21ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. சென்னையில் 21ம் தேதி மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 41,172 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,887 பேர் குணம் அடைந்துள்ளனர்.

16067 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது 45 சதவீதம் பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எங்கு அதிக பாதிப்பு

எங்கு அதிக பாதிப்பு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 6288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 5116 பேரும், கோடம்பாக்கத்தில் 4485 ஆகவும், தேனாம்பேட்டையில் 4967 ஆகவும், அண்ணா நகரில் 4385 பேருக்கும், திருவிக நகரில் 3532 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 2435 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1719 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்பு விதிகம் 1 சதவீதம்

இறப்பு விதிகம் 1 சதவீதம்

22.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60,13% பேர் ஆண்கள் ஆவர். 39,87 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். சென்னையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உயர்நதுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஜூன் 22ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.திருவெற்றியூர்: 1545

  • மணலி: 581
  • மாதவரம் 1135
  • தண்டையார் பேட்டை 5116
  • இராயபுரம் 6288
  • திருவிக நகர் 3532
  • அம்பத்தூர் 1519
  • அண்ணா நகர் 4385
  • தேனாம்பேட்டை 4967
  • கோடம்பாக்கம் 4485
  • வளசரவாக்கம் 1719
  • ஆலந்தூர் 880
  • அடையாறு 2435
  • பெருங்குடி 854
  • சோழிங்கநல்லூர் 775
  • மற்ற மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 956

எங்கு என்ன பாதிப்பு

எங்கு என்ன பாதிப்பு

சென்னையில் அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 3842 பேர் குணம் அடைந்துள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்புடன் அங்கு 2337 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2685 பேர் குணம் அடைந்துள்ளனர். ஆனால் இராபுரத்தை விடஅதிகமாக 2251 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் 2813 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 2072 பேர் மருத்துவமனையில் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். அண்ணாநகரில் 2137 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில் 2193 பேர் நோய் பாதிப்புடன் கிசிச்சை பெறுகிறார்கள். கோடம்பாக்கத்தில் 2501 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில், 1934 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையிலேயே அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 109 பேரும், தேனாம்பேட்டையில் 82 பேரும், தண்டடையார் பேட்டையில் 80 பேரும், அண்ணாநகரில் 55 பேரும், கோடம்பாக்கத்தில் 50 பேரும், அடையாறில் 26 பேரும், திருவிக நகரில் 73 பேரும் கொரோனாவால் உயரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சென்னையில் 601 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+