Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஆன்லைன் வகுப்புக்கு ஹேல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..'கோரிக்கை வைத்த மாணவி..மறுநாளே டேப் வாங்கி தந்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிகளுக்கு வழங்கி, ஆன்லைன் கல்விக்கு உதவுமாறு கோரிக்கை வைத்த மாணவிக்கு உதயநிதி டேப் ஒன்றைப் பரிசாக அளித்தார்

சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அக்கட்சியின் இளைஞரனி செயலாளர் உதயநிதி.

தேர்தலுக்கு பின் பிரசாரத்தின் போதே அவரது பேச்சுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிமுக- பாஜக கூட்டணி முதல் எய்ம்ஸ் மருத்துவமனை வரை அவரது பேச்சுகள் லைக்ஸ்களை அள்ளின.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிறகு சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும்கூட சேப்பாக்கத்தில் தொகுதி மக்களுடைய குறைகளைத் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். தன்னை சட்டசபைக்கு முதலில் அனுப்பிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை மாநிலத்திலேயே முன்மாதிரியான ஒரு தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

சேப்பாக்கம் தொகுதி

சேப்பாக்கம் தொகுதி

தினமும் சேப்பாக்கம் பகுதியில் எதாவது ஒரு பகுதியில் கண்டிப்பாக அவரை பார்த்துவிடலாம். அது திமுக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்று என்றாலும்கூட, வேறு எந்த எம்எல்ஏவும் இப்படி தங்களை தினசரி பார்த்து குறைகளை கேட்டதில்லை என அப்பகுதி மக்களும் உதயநிதிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் ராயப்பேட்டை மருத்துவமனையில் உதயநிதி ஆய்வு செய்தபோது, அங்குள்ள கழிவறை சுத்தமாக உள்ளதா என்பதை அவரே நேரில் சென்று ஆய்வு செய்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலானது.

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடை

அதேபோல சில வாரங்களுக்கு முன் சேப்பாக்கம் வெங்கடேசன் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அந்தக் கடையை மூட நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, மறுநாளே அந்த டாஸ்மாக் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

உண்டியல் பணம்

உண்டியல் பணம்

இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன் உதயநிதி திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கந்தப்பன் தெருவில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வசிக்கும் சீனிவாசன்-சோனியா தம்பதியினரின் மகள் சுவலட்சுமி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை முழுவதுமாக கொரோனா நிவாரண நிதியாக எம்எல்ஏ உதயநிதியிடம் வழங்கினார்.

டேப் வழங்கிய உதயநிதி

டேப் வழங்கிய உதயநிதி

மேலும், தற்போது பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், வீட்டில் கணினி இல்லாததால் ஆன்லைனில் கல்வி கற்கச் சிரமப்படுவதாகவும் இதனால் தான் கல்வி கற்க உதவ வேண்டும் என்றும் உதயநிதியிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மறுநாளே அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி மாணவி சுவலட்சுமி கல்வி கற்க உதவியாக டேப் ஒன்றை அளித்தார். நன்றாகப் படிக்குமாறும் அந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

முன்னதாக இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநிலத்தில் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வந்த பிறகு, பெற்றோர்கள் மத்தியில் அச்சம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். இதற்காக ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பு என்ன வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அதுவரை அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+