சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடே சூப்பர்! செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. நேரு அரங்கில் அண்ணா, கருணாநிதி உடன் ஜெயலலிதா படம்

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மேடை இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Recommended Video

    மனைவி மகனோடு Chess Olympiad நிறைவு விழாவுக்கு வந்த உதயநிதி

    இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

    கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சென்னை மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

    இன்னைக்கும் சம்பவம் இருக்கு -செஸ் ஒலிம்பியாட் ஃபைனல் குறித்து விக்னேஷ் சிவன் கொடுத்த சூப்பர் அப்டேட்இன்னைக்கும் சம்பவம் இருக்கு -செஸ் ஒலிம்பியாட் ஃபைனல் குறித்து விக்னேஷ் சிவன் கொடுத்த சூப்பர் அப்டேட்

     செஸ் ஒலிம்பியாட்

    செஸ் ஒலிம்பியாட்

    வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர். அதேபோல இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    பல பதக்கம்

    பல பதக்கம்

    இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்தது. இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது. உக்ரைன் போருக்கு இடையிலும் பெண்கள் பிரிவில் அந்த அணியினர் தங்கம் வென்றனர். அதேபோல ஜார்ஜியா வெள்ளியையும் இந்தியா ஏ வெண்கலத்தையும் வென்றது. அதேபோல தனிநபர் பிரிவில் குகேஷ், நிகால் சரினுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

    பதக்கங்கள்

    பதக்கங்கள்

    அதேபோல ஒபன் பிரிவைப் பொறுத்தவரை உஸ்பெகிஸ்தான் தங்கத்தையும் அர்மீனியா வெள்ளியையும் இந்தியா பி அணி வெண்கலத்தையும் வென்றது. இது தவிர தனிநபர் பிரிவிலும் இந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதனிடையே இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை நிறைவு விழாவும் நடைபெறுகிறது.

     நிறைவு விழா

    நிறைவு விழா

    இதில் செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்க உள்ளார். ஒலிம்பியாட் தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவையும் பிரம்மாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகளும் நடந்துள்ளன. பல முக்கிய பிரபலங்களும் இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஜெயலலிதா படம்

    ஜெயலலிதா படம்

    இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெறும் நிலையில், ஏற்கனவே நேரு ஸ்டேடியத்தில் மக்கள் திரளத் தொடங்கிவிட்டனர். அங்கு மேடையில் அமைக்கப்பட்டுள்ள திரையில் தமிழகத்தின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி படம் மட்டுமின்றி அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்று உள்ளது

    பாராட்டு

    பாராட்டு

    வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ அந்தக் கட்சியின் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படமும் அவர் குறித்த தகவல்களும் இடம்பெறுகின்றன. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Ex chief minister Jayalalithaa photo in Chess olympiad closing ceremony: (செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா படம்) Chess olympiad closing ceremony Jayalalithaa photo.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X