சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் ரிசல்ட்.. பாஜக பக்கம் திசை மாறிய காற்று.. ஆட்சியை கைப்பற்றியது
சென்னை: சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 17ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. சத்தீஸ்கரின் ஆரம்ப நிலைகளின் விவரங்களின்படி, காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பாஜகவும் விடாமல் விரட்டி வந்தது.
நேரம் செல்லச்செல்ல காற்று பாஜகவிற்கு சாதகமாக வீசியது. பாஜக 54 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்க மொத்தம் 46 தொகுதிகள் தேவை என்ன நிலையில் பாஜக 54 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
கருத்துக்கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே கூறப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெளியான முடிவுகள் பாஜகவிற்கு சாதகமானது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரியணை ஏறப்போகிறது பாஜக. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாஜக தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் இருந்தது. 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
5 ஆண்டுகள் எதிர்கட்சி வரிசையில் பாஜக அமர்ந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications