சத்தீஸ்கர்: மீண்டும் காவி கொடி பறக்குமா? ரூ.6,350 கோடி ரயில் திட்டங்களுடன் மோடி இன்று பிரசாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ரூ6,350 கோடி ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவிடம் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன பெரும்பான்மை கருத்து கணிப்புகள். பாஜகவுக்கு மிகவும் சொற்பமான இடங்களே கிடைக்கவும் கூடும் என்கின்றன அந்த முடிவுகள்.

Chhattisgarh: PM Modi to dedicate Rs. 6,350 railway projects to nation today

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி இன்று அம்மாநிலம் செல்கிறார். சத்தீஸ்கரின் ராய்கரில் சுமார் ரூ.6,350 கோடி மதிப்பிலான முக்கியமான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1, சம்பா முதல் ஜம்கா வரை 3 வது ரயில் பாதை, பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 3 வது ரயில் பாதை மற்றும் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்தை என்.டி.பி.சி லாரா சூப்பர் அனல் மின் நிலையத்துடன் (எஸ்.டி.பி.எஸ்) இணைக்கும் எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.

கிழக்கு ரயில் திட்டம்: சத்தீஸ்கர் கிழக்கு ரயில் திட்டம் கட்டம் -1 பன்முக இணைப்பிற்கான தொலைநோக்குத் திட்டமான பிரதமர் விரைவுசக்தி - தேசிய மாஸ்டர் பிளானின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது, மேலும் இது கார்சியாவிலிருந்து தரம்ஜய்கர் வரை 124.8 கி.மீ ரயில் பாதையை உள்ளடக்கியது, இதில் கரே-பெல்மாவுக்கு ஒரு பாதை மற்றும் சால், பரோட், துர்காபூர் மற்றும் பிற நிலக்கரி சுரங்கங்களை இணைக்கும் 3 இணைப்புச்சாலைகள் அடங்கும். சுமார் ரூ.3,055 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில், மின்மயமாக்கப்பட்ட அகல ரயில்பாதை லெவல் கிராசிங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளுடன் கூடிய இரட்டைப் பாதை ஆகியவை உள்ளன. இது சத்தீஸ்கரின் ராய்கரில் அமைந்துள்ள மாண்ட்-ராய்கர் நிலக்கரி வயல்களில் இருந்து நிலக்கரி போக்குவரத்திற்கு ரயில் இணைப்பை வழங்கும்.

3-வது ரயில் பாதை: பெந்த்ரா சாலை முதல் அனுப்பூர் வரை 50 கி.மீ நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதை சுமார் ரூ .516 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சம்பா மற்றும் ஜம்கா ரயில் பிரிவு இடையே 98 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்றாவது பாதை சுமார் 796 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதைகள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதோடு சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

எம்.ஜி.ஆர் அமைப்பு: 65 கி.மீ நீளமுள்ள மின்மயமாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் (மெர்ரி-கோ-ரவுண்ட்) அமைப்பு தேசிய அனல்மின் நிலையத்தின் தலைப்பள்ளி நிலக்கரி சுரங்கத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள 1600 மெகாவாட் லாரா சூப்பர் அனல் மின் நிலையத்திற்கு குறைந்த விலை, உயர் தர நிலக்கரியை வழங்கும். இது தேசிய அனல்மின் நிலையம் லாராவிலிருந்து குறைந்த செலவில் மற்றும் நம்பகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதை அதிகரிக்கும், இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும். ரூ.2070 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் அமைப்பு, நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின் நிலையங்களுக்கு நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தொழில்நுட்ப அதிசயமாகும்.

அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள்: இந்த நிகழ்ச்சியின் போது, சத்தீஸ்கரின் ஒன்பது மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட 'அவசரகால சிகிச்சைப்பிரிவு கட்டடங்களுக்கு' பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் துர்க், கொண்டகான், ராஜ்நந்த்கான், கரியாபந்த், ஜஷ்பூர், சூரஜ்பூர், சுர்குஜா, பஸ்தர் மற்றும் ராய்கர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.210 கோடிக்கும் அதிகமான செலவில் ஒன்பது அவசர கால சிகிச்சைப்பிரிவு கட்டடங்கள் கட்டப்படும்.

பழங்குடி நலன்: அரிவாள் செல் ரத்த சோகை நோயால், குறிப்பாக பழங்குடி மக்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், பரிசோதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் அரிவாள் செல் ரத்த சோகை நோய் தடுப்பு ஆலோசனை அட்டைகளையும் பிரதமர் வழங்குவார். மத்தியப் பிரதேசத்தின் ஷாதோலில் ஜூலை 2023-ல் பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ் அரிவாள் செல் தடுப்பு ஆலோசனை அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+