மோடி கிட்டயே சொல்லுவேன்.. பாஜக கார்த்தியாயினி பேசப்பேச மலைத்த சிதம்பரம்.. கவனித்த திமுக, விசிக.. பலே
சென்னை: சிதம்பரம் தொகுதியில் பாஜகவின் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.. அதற்கேற்றவாறு, தொகுதி மக்களின் கவனத்தையும் பாஜகவினர் ஈர்த்து வருகிறார்கள்.
மீனவர்களும், விவசாய கூலிகளும் அதிகமுள்ள தொகுதி இந்த சிதம்பரம் தொகுதியாகும்.. கார்பன் எடுக்க அனுமதித்தது, ஜெயங்கொண்டம் அனல் மின் விரிவாக்கம் போன்றவையெல்லாம் இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாகும்..

திருமாவளவன்: இந்த தேர்தலில் 6வது முறையாக விசிக தலைவர் திருமாவளவன் களம் காண்கிறார்.. கடந்த முறையே மிக குறைந்த அளவு வித்தியாசத்திலேயே அவர் வெற்றி பெற முடிந்தது. இப்போது பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி மிகப்பெரிய பலமாக திருமாவுக்கு உள்ளது.
அதுபோலவே, சிறுபான்மையினர் வாக்குகளை லட்டு போல அள்ளும் சான்ஸும் திருமாவுக்கு உள்ளது. அனைத்தையும்விட, உதயநிதி ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துவிட்டு போனது, விசிகவுக்கான பலமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
பாஜக : இந்த தொகுதியில், அதிகம் பேசப்பட்டு வருபவர் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி ஆவார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசி ஆவார்.. ஜெ.இறந்ததுமே, பாஜகவுக்கு வந்துவிட்டார் கார்த்தியாயினி. இது பாஜகவுக்கு பிளஸ் என்றாலும், கார்த்தியாயினிக்கு சான்ஸ் தந்ததால், தடா பெரியசாமி அதிமுகவுக்கு சென்றுவிட்டது, பாஜகவுக்கு மைனஸே ஆகும்.
திமுக எதிர்ப்பு ஓட்டு + பாமகவின் ஓட்டு வங்கி இணைந்து, கார்த்தியாயினிக்கு வெற்றி வாய்ப்பை தருமா? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதுமட்டுமல்ல, தன்னுடைய பிரச்சாரத்திலும் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து கார்த்தியாயினி பேசி வருகிறார்.
பிரச்சாரம்: இன்றுகூட கார்த்தியாயினி பேசும்போது, "போன தேர்தலில் வெற்றி பெற்று, திருமாவளவன் நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் வரவில்லை... இப்போதும் வெற்றி பெற்றுவிட்டால், மறுபடியும் தொகுதிபக்கம் வர மாட்டார். மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி தான் வரப்போகிறது. நான் வெற்றி பெற்றால், பிரதமரிடம் நேரடியாகவே சென்று சிதம்பரம் தொகுதி மக்களுக்கான அனைத்து விதமான நலத்திட்டங்களையும் கேட்டு பெறமுடியும்.
ஆனால், பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாத, இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், வெற்றி பெற்றாலும் எந்த நலத்திட்டங்களையும் கேட்டு பெற முடியாது.
என்னை வெற்றி பெற செய்தால், என் குடும்பத்துடன், இதே தொகுதியில் வந்து தங்கி விடுவேன்... என் குழந்தைகளை இங்கிருக்கும் ஸ்கூலிலேயே படிக்க வைப்பேன். அப்படி வாக்குறுதியை நான் தீர்த்து வைக்காவிட்டால், என்னை நேரில் வந்து நீங்கள் தாராளமாக கேள்வி கேட்கலாம்" என்கிறார் கார்த்தியாயினி.
பெருமாள் கோயில்: ஏற்கனவே, அரியலூரில் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த திருமாவளவனை பாஜக தரப்பு விமர்சித்து வருகிறது. இந்து மதத்தை பற்றியும், இந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாக பேசும் திருமாவளவனை, திமுகவும் கண்டுக்கொள்வதே கிடையாது.
தேர்தல் வந்துவிட்டாலே, திருமாவளவனுக்கு எங்கிருந்தோ இந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்துவிடுகிறார் என்று விமர்சித்து வரும்நிலையில், பாஜக வேட்பாளரின் பிரச்சாரமும் பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications