சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் விவகாரம்.. அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கோவில் நிர்வாகத்தில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை இரண்டு நீதிபதிகள் அமர்வின் முடிவுக்கே விடுவதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி, கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க உதவியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி, நடராஜ தீட்சிதர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்து அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதேபோல், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள், இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நடராஜர் கோவிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளதாகவும், அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது எனவும் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் சஸ்பெண்ட் விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும் எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டதாகவும், அவர் தில்லை காளியம்மன் கோவிலில் சேவை செய்து வருவதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தார்.
அதேசமயம், கோவில் நிர்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை இரு நீதிபதிகள் அமர்வு முடிவுக்கு விட்டு விடுவதாக நீதிபதி தண்டபாணி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications