கனகசபையில் அனுமதியில்லை.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.. சேகர்பாபு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை வழிபாடு விவகாரத்தில் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையும் கனகசபை மீது வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தீட்சிதர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இது போன்று தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி மறுத்து பலகை வைத்துள்ளனர் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயம் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது.

நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சிற்றம் பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை என்று அழைக்கப்படும். சிற்றம்பலம் என்பது நடராஜர் ஆடும் சித்சபையைத்தான் 'சிற்றம்பலம்' என்கிறோம். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, சிவகாமி அம்மை எப்போதும் கண்டு ரசித்தபடி இருக்கிறார். இதற்கு தப்ர சபா என்ற பெயரும் உண்டு. இந்த சபைக்கு இரண்யவர்மன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்தான். இங்குள்ள படிகள் பஞ்சாட்சர படிகள் என்றும், நமசிவாய படிகள் என்றும் போற்றப்படுகின்றன.
சிற்றம்பலத்திற்கு முன்பாக உள்ளது பொன்னம்பலம். இதனை 'கனகசபை' என்றும் அழைப்பர். இங்குதான் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து பேரம்பலம் இந்த இடத்திற்கு 'தேவசபை' என்றும் பெயர். விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் சபை இதுவாகும். இந்த சபைக்கு, மூன்றாம் குலோத்துங்கன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்துள்ளான்.

நிருத்தசபை என்பது நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே அமைந்திருக்கிறது. இங்கு நடராஜர், ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார். ராஜசபை என்பது சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்தான், ராஜ சபை ஆகும். ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் விழாவில், தேரில் பவனி வரும் நடராஜர், இந்த ராஜசபைக்கு எழுந்தருள்வார். ஆருத்ரா தரிசனம் இங்குதான் நடைபெறும். அப்போது சிவகாமியம்மன் முன்பாக நடராஜர் முன்னும், பின்னுமாக நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு 'அனுக்கிரக தரிசனம்' என்று பெயர்.
நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பல நேரங்களில் தீட்சிதர்கள் அனுமதி வழங்குவதில்லை என புகார் எழுந்தவண்ணம் இருக்கிறது. நேற்று நடராஜர் கோவிலில் பக்தர்கள் நான்கு நாட்கள் கனகசபை மீது ஏற கூடாது என அறிவிப்பு பலகை வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கோவிலுக்கு வந்த இந்துசமய அறநிலையத்துறை செயலர் சரண்யா, தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றபோது, மிரட்டும் பாணியில் நடந்து கொண்டதாகவும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அனுமதி பலகையை அகற்ற முயலும்போதும் பனி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது, உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் கனகசபை விவகாரத்தில் அறநிலையத்துறை முடிவு செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கனகசபை மீது வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தீட்சிதர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இது போன்று தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி மறுத்து பலகை வைத்துள்ளனர். இது குறித்து தீட்சிதர்கள் மீது, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் வரும்போது தான் பிரச்னை வருகிறது. அரசைப் பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம், அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்பது தான் கொள்கை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், எவையெல்லாம் தேவையற்றவையோ அவற்றையெல்லாம் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications