நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் சனிக்கிழமை அன்று ரமலான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தெரியாததால் நாளை மறுதினம் (மார்ச் 21) ரமலான் கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு, கடந்த மாதம் தொடங்கியது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்குவதைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று பிறை தென்படாததால் ரமலான் பண்டிகை மார்ச் 21-இல் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று பிறை தென்படாததால் நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டம் இல்லை.
இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஈத் பிறையைக் காண்பதில் உள்ள வேறுபாட்டிற்கான முக்கிய காரணம் புவியியல் அமைப்பு. சவுதி அரேபியா இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ளது. இதன் காரணமாக பிறையின் நிலையைப் பொறுத்து அங்கு சூரியன் தாமதமாக மறைகிறது. சூரியன் மறையும் நேரத்தில், இந்தியாவை விட சவுதி வானத்தில் பிறை சற்று உயரமாகவும் பிரகாசமாகவும் தெரிகிறது. எனவே, அங்கு முந்தைய நாளே ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications