சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதல்வர் வைத்த ஆப்பு... அரசியல் மத கூட்டங்களுக்கு கட்டுப்பாடு நீடிப்பு

சமுதாய, அரசியல், மத ரீதியான கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர்16 ஆம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அரசின் தடை உத்தரவை மீறி வேல் யாத்திரை நடைபெற்று வருவதால் தமிழக அரசு சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர்16 ஆம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அதே சமயம் பல்வேறு துறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் வரும் 16 ஆம் தேதி முதல் மத, அரசியல் கூட்டங்கள் 100 பேருடன் நடத்த அரசு அனுமதியளித்தது.

Chief Minister Extension of control over political and religious meetings

பாஜக வேல் யாத்திரைக்கு கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. ஆனால் தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த செயலானது தொடர் கதையானதால் தமிழக அரசு மத, அரசியல் கூட்டத்திற்கு தடையை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு அறிவிப்பு, 100 பேர் வரை அனுமதி போன்றவற்றை காரணம் காட்டி பாஜக வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் சமுதாய, அரசியல், மத, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வு, கல்வி கூட்டங்களுக்கு கட்டுப்பாடு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. நவம்பர்16 ஆம் தேதி முதல் 100 பேருக்கு மேல் பங்கேற்கலாம் என்ற உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. பாஜகவின் வேல் யாத்திரையில் பலர் பங்கேற்பதாக அரசு கூறி வந்த நிலையில் இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியான சென்னை.. மாநகர், புறநகரில் பரவலாக மழை.. ஆஃப் மோடில் ஏசி, ஃபேன்! ஊட்டியான சென்னை.. மாநகர், புறநகரில் பரவலாக மழை.. ஆஃப் மோடில் ஏசி, ஃபேன்!

அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை சென்றே தீரும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ள நிலையில் தமிழக அரசு இன்று தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

English summary
The Tamil Nadu government has announced that it will continue to ban meetings including social, political and religious as the Vail pilgrimage is being held in violation of the government's ban. The order, which allows more than 100 people to attend from November 16, is being revoked until further notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X