முற்போக்கு படைப்புகள் திரையை ஆளட்டும்..சினிமா கலைஞர்களுக்கு பாராட்டு..முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
சென்னை: தேசிய விருது வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிப்பு, இயக்கம், திரைக்கதை, வசனம், சிறந்த திரைப்படம், சிறந்த தமிழ்ப் படம், சிறந்த உறுதுணை நடிப்பு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பு என 10 விருதுகளை தமிழ் சினிமா வென்றுள்ளது. அதில் சூரரைப்போற்று படம் 5 விருதுகளையும் , மண்டேலா படம் 2 விருதுகளையும் விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் மூன்று விருதுகளையும் வென்று அசத்தியுள்ளன.

அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத் வென்றுள்ளார்.
சிறந்த தமிழ் படமாக சூரரைப் போற்று படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோன் அஸ்வின் வென்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய விருதுகளை வென்ற மூன்று தமிழ் திரைப்படக் குழுவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், 68வது தேசிய திரைப்பட விருதுகளைக் குவித்துத் தமிழ்த் திரை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் இயக்குநர் வசந்த், லட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்று பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications