வைக்கம் நூற்றாண்டு விழா.. சென்னையில் பெரியாருக்கு மரியாதை.. மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு
சென்னை: வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழா நாளைய தினம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, 1924-ஆம் ஆண்டு அங்கு மிகப் பெரிய போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது, போராட்டத்தை தொடர்ந்து நடத்த, போராட்டக்குழு தலைவர்கள் தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதனையேற்று, வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார். போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இதனால், தந்தை பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதல் முறை ஒரு மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை யில் கால்களிலும், கைகளிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர் சிரமபடுத்தப்பட்டார்.
இந்த நிலையில், திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். தந்தை பெரியாருடன் சமாதானம் செய்து கொண்டு, வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையை ராணி நீக்கினார். ஆனால், தந்தை பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவும் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும்.
இந்தப் போராட்ட வெற்றியின் 100 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரையும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் 'பெரியாரும் வைக்கம் போராட்டமும்' என்ற நூலையும் வெளியிடுகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைக்கம் போராட்ட வெற்றியின் 100-ஆம் ஆண்டினை குறிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா 28.12.2023 அன்று வியாழன் காலை 11.15 மணியளவில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும்.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலரை வெளியிட்டு விழாப் பேருரை நிகழ்த்துகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் "பெரியாரும் வைக்கம் போராட்டமும்" என்ற நூலை வெளியிட்டு முன்னிலையுரை ஆற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழாச் சிறப்புரையாற்றுகிறார்.
இவ்விழாவின்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை தயாரித்துள்ள வைக்கம் போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications