சவுத் ‘விசிட்’ அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்.. மார்ச்சில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கள ஆய்வு!
முதல்வர் ஸ்டாலின் அடுத்த கட்டமாக தென் மாவட்டங்களில் ஆய்வுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், வரும் மார்ச் 5, 6 ஆகிய நாட்களில் மதுரை மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.

கள ஆய்வில் முதலமைச்சர்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

நேரில் அதிரடி ஆய்வு
அதைத் தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி சேலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், நடந்து முடிந்த திட்டப் பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் குறித்த செயல்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சேலத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அடுத்தகட்டமாக மதுரை
இந்நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் அடுத்தகட்டமாக வரும் மார்ச் 5, 6ஆம் தேதிகளில் மதுரை மண்டலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்குச் செல்லத் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்கள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மாவட்டங்களில்
அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications