Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இந்த மாதமே 3 மெகா திட்டங்கள்.. மிகப்பெரிய சர்ப்ரைஸ் .. முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசால் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே எந்த முடிவும் எடுக்க முடியும். இந்நிலையில் இந்த மாதத்தில் தமிழக அரசு 3 மெகா திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணியில் தீவிரமாக இறங்கி உள்ளதாம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த மாதமே 3 மெகா திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், பொங்கலுக்கு ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் உரிமை தொகை ஆகிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Chief Minister MK Stalin is set to implement 3 mega schemes this month itself major surprise


மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம்

தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

டிசம்பர் 15ம் தேதி தெரியவரும்

இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் வழங்கப்பட உள்ளது. எனினும் எத்தனை பெண்களுக்கு வழங்கப்படும் என்பது டிசம்பர் 15ம் தேதியின் போது தான் தெரியவரும்.

அடுத்ததாக லேப்டாப்கள் வழங்கும் திட்டம்

பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.. தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மார்ச் மாதமே கிடைக்கும்

இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்

பொங்கல் பரிசு என்பது புதிய திட்டம் இல்லை என்றாலும், இந்த ஆண்டு மட்டும் ரொக்கம் வழங்கப்படவில்லை.. ஆனால் அடுத்த ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றே சொல்கிறார்கள். இதற்கான பணிகள் டிசம்பரிலேயே தொடங்கும் என்கிறார்கள். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகை 5000 ரூபாய் வரை தர வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.. தமிழக அரசு கடும் நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றே எதிர்க்கட்சிகள் கூட நம்புகின்றன.

செலவு எவ்வளவு

தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி செலவு ஆகும். இதில் எவ்வளவு தொகை என்பது குறித்து மு.க.ஸ்டாலின் இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார் என்கிறார்கள். அனேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இதற்கு விடை தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+