சீட்டை கலைத்து போடும் ஸ்டாலின்..அமெரிக்கா போகும் முன் மெகா மாற்றம்! உச்சகட்ட அதிர்ச்சியில் சீனியர்ஸ்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும், தற்போது அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களுக்கு பதிலாக புதிதாக சிலர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பல சீனியர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்..
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பிறகு நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே இந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து பல வாரங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரிக்கை வலுத்துள்ளதே என செய்தியாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் ''வலுத்துள்ளது ; ஆனால், பழுக்கவில்லை'' என்று பதிலளித்து விட்டு சென்றார். இந்நிலையில் அமைச்சராக இருக்கும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க தந்தை ஸ்டாலினுக்கு இப்போதைக்கு விருப்பமில்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விமர்சித்தன.
இதற்கிடையே தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்த போது அது உண்மை தான் என்கின்றனர். அதில் துணை முதல்வர் விவகாரமும் இருக்கும் எனவே கூறியுள்ளனர். அதன்படி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்கான வாய்ப்புள்ளதோடு, அவரது குட்புக்கில் இடம்பெற்றுள்ள சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என சொல்கின்றனர்.
இன்னும் சில தினங்களில் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும், தற்போது அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்களுக்கு பதிலாக புதிதாக சிலர் நியமிக்கப்படலாம் என தகவல் உலாவுகிறது. ஏற்கனவே அமைச்சராக இருந்த ஒருவர் அமைச்சர் பதவியில் நீக்கப்பட்ட நிலையில் அவரும் அமைச்சரவையில் இடம் பெறுவதாக சொல்கின்றனர் திமுகவினர். மேலும் சிறப்பாக செயல்படாத சில அமைச்சர்களின் இலாகாவை மாற்றம் செய்யவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக இந்த மாற்றங்கள் இருக்கும் எனவும், சில மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் அந்த மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் பெறலாம் என தகவல்கள் உலாவுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்று உள்ள நிலையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தலைமைச் செயலர் மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என நிச்சயமாக சொல்கின்றனர் திமுகவினர்.
சிறப்பாக செயல்படாத அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்ற அறிவிப்பால் சில சீனியர் அமைச்சர்கள் பதற்றத்தில் இருப்பதாகவும், இதுதொடர்பாக தங்கள் லாபிக்களை தொடர்பு கொண்டு "லிஸ்டில் நம்ம பேரு இருக்கானு பாத்து சொல்லுங்க என கேட்டு வருகிறார்களாம்..
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications