மீண்டும் மீண்டும் "ஒன்றியம்".. தமிழ் முக்கியம்! மோடி முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக பேசிய ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று காந்தி கிராமம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தினார். இதில் முக்கியமான சில விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தார். திண்டுக்கல் வந்த பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர்.

அரசியல்
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அரசியல் பேசவில்லை. இருந்தாலும் இடையே இடையே மத்திய அரசுக்கு அழுத்தம் திருத்தமாக சில விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். அவர் தனது உரையை தொடங்கும் போதே ஒன்றிய இந்திய அரசின் பிரதமர் மோடி என்று கூறிதான் பேச தொடங்கினார். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர் ஒன்றிய இணை அமைச்சர் எல் முருகன் என்று கூறினார். அதன்பின் மேலும் இரண்டு இடங்களில் ஒன்றிய அரசு என்று கூறினார்.

ஆங்கிலம்
இடையில் ஆங்கிலம் பேசிய போதும் union என்ற வார்த்தையைத்தான் குறிப்பிட்டார். பிரதமர் மோடிக்கு முன்பாக மீண்டும் மீண்டும் ஒன்றியம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதோடு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக குரல் கொடுத்து வரும் நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தமிழின் அருமைகளை புகழ்ந்து கூறினார். அதில், தேச தந்தை காந்திக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு அதிகம். 26 முறை தமிழகம் வந்தார் காந்தி- தமிழில் கையெழுத்திட்டவர் காந்தி.

காந்தி தமிழ்
உயராடை அணிந்த காந்தியை அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண். திருக்குறளை கற்க விரும்பியவர் காந்தியடிகள். வடஇந்தியர்கள் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அதில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றம் அடைந்த மாநிலம். தமிழ்நாட்டில் கல்வியை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

கல்வி
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று காந்தி கிராமம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசினார். கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. கல்வி ஒன்றிய பட்டியலில் தொடர்ந்து இருக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் திருப்பமாக கூறினார். பிரதமர் மோடி இருந்த மேடையில் அவருக்கு புரிய வேண்டும் என்று இதை மட்டும் ஆங்கிலத்தில் மோடி குறிப்பிட்டார். ஸ்டாலின் இப்படி அரசியல் ரீதியாக பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications