பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்.. ஒரு மாதம் முன்கூட்டியே ஆரம்பிங்க.. விவசாயிகளுக்கு நல்ல காலம்!
சென்னை : தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால் நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-க்கு பதிலாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதலே தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அனைத்து காரிஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்ததற்காக நன்றி சொல்ல விரும்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இந்தாண்டு வேளாண்மைக்கு சாதகமான ஒப்பருவம் நிலவுகிறது என்பதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-க்கு பதிலாக செப்டம்பர் 1-ம் தேதியே தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசின் நடவடிக்கைகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.80 கோடி செலவில் விவசாய உள்ளீடு தொகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் தரமான விதைகள் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் இறுதிக்குள் குறுவை நாற்றுப் பணியை முடிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நன்றி
அனைத்து காரிஃப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்ததற்காக இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். பொதுவாக, நெல் அறுவடை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் நடைபெறும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் விளைச்சல் இழப்பு அல்லது பெரும் பயிர் சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், இந்த ஆண்டு, முன்முயற்சி நடவடிக்கைகளின் காரணமாக நெல் அறுவடை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 மாதம் முன்னதாகவே
மாநில அரசும், விவசாயிகளும் குறுவை அறுவடை செய்யும் நம்பிக்கையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், தமிழ் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், நெல் கொள்முதலை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications