Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தொடர்பாக ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு எழுப்பிய 14 கேள்விகளை பற்றி ஊட்டியில் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை நிலுவையில் வைத்து தாமதம் செய்வதாக குற்றம்சாட்டி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே ஒப்புதலும் அளித்தது. அதேபோல் வரலாற்றில் முதல்முறையாக குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

MK Stalin President governor

இந்த தீர்ப்பு தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கலாமா அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.இந்த சூழலில் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பினார்.

ஒரு மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு வரும்போது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்கீழ், அவருக்கு இருக்கும் சட்டரீதியான வாய்ப்புகள் என்ன, அப்படி ஒரு மசோதா அனுப்பப்பட்டு, தனக்குரிய அனைத்து வாய்ப்புகளையும் கவர்னர் பயன்படுத்தும்போது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநரின் தனியுரிமை என்பது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டதா? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக கோர்ட்டு விசாரிக்க, அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு தடையாக உள்ளதா? என மொத்தம் 14 கேள்விகளை ஆளுநர் ரவி எழுப்பினார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் மூலம் கேள்வி எழுப்பி உள்ளதாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதன்மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பது அம்பலமாகி உள்ளது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள்கொள்வதில் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமைகொண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.

கவர்னர்கள் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்? சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, கவர்னர்களின் முட்டுக்கட்டையை பாஜக சட்டப்பூர்வமாக்க முயல்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களை மத்திய அரசு முடக்க எண்ணுகிறதா?

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களைத் திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய பாஜக அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கி உள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜனதா அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு எழுப்பிய 14 கேள்விகளை பற்றி ஊட்டியில் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் பிற மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2026 தேர்தல் மட்டுமின்றி 2031, 2036 தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+