கலெக்டர்கள் தினமும் நியூஸ் படிக்கணும்! நாட்டு நடப்புகளை தெரிஞ்சுக்கணும்! முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
சென்னை: மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தினமும் தவறாமல் நியூஸ் படிக்கவேண்டும் என்றும் ஊடகங்களை தொடர்ந்து பார்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்படி பார்த்தால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் இது பற்றி முதல்வர் பேசியதாவது;

தினமும் நியூஸ் படிங்க: முக்கியமாக நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது, தினமும் குறிப்பாக நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால்தான், என்ன நாட்டில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும்.
முதல் வேலை இது தான்: அப்படி உங்களது மாவட்டங்களைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்த வகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலை முதல் duty-ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பெயரை ஈட்டித் தரணும்: அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி, அரசின் திட்டங்களை, சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கும் உங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை ஈட்டித் தரவேண்டுமென்று அன்போடு கேட்டு, அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்பீடாக இயங்க வேண்டும்: கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும், குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறையும் இல்லாமல் முழுமையாக குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications