மீண்டும் தென்னை நல வாரியம்! முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை! யாருக்கு தலைவர் பதவி? அலைமோதும் விஐபிக்கள்!
சென்னை: தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த இன்னலை சந்தித்து வரும் சூழலில், மீண்டும் தென்னை நல வாரியம் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தென்னை நல வாரியத்தை ஏற்கனவே கருணாநிதி உருவாக்கியிருந்தாலும் கூட காலப்போக்கில் அது செயல்பாடற்ற ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக முக்கியப் பிரமுகர்களே தென்னை நல வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வருக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

தேங்காய் விலை
தேங்காய் ஒன்றின் விலை கடைகளில் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது என்றால், தென்னை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்கும் விலையோ ரூ.8 முதல் ரூ.12 வரை மட்டுமே. மிஞ்சிப்போனால் காய் கொஞ்சம் பெரிதாக இருந்தால் அதிகபட்சம் ரூ.15 கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். அதுவும் ஒது பொள்ளாச்சி காய்களுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோல் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.110 ஆதார விலையாக அரசு நிர்ணயித்திருந்தாலும் கூட ரூ.75 முதல் ரூ.85 வரை மட்டுமே சந்தையில் விலை கிடைக்கிறது.

தென்னை விவசாயிகள்
இதனால் தென்னை விவசாயிகள் குப்பை வைத்து மரங்களை பராமரிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறார்கள். இந்தச் சூழலில் தான் தேங்காய் விலை வீழ்ச்சியை சரி செய்யும் விதமாக அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூட இதைத் தான் வலியுறுத்துகிறார்.

முதல்வருக்கு கடிதம்
அதேபோல் தென்னை விவசாயிகளின் பிரச்சனைகளை பேசி தீர்வு காண தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக முக்கியப் பிரமுகர்கள் பலரும், முதல்வரிடம் இது தொடர்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஒரு படி மேலாக சென்று முதல்வருக்கு கடிதமே எழுதியிருக்கிறார்.

முதல்வர் முடிவு
இதனால் மீண்டும் தென்னை நல வாரியம் ஆக்டிவாக இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, அந்த வாரியத்துக்கு யாரை தலைவராக நியமிக்கலாம் எனப் பார்த்தால், நூற்றுக்கணக்கானோர் எனக்கு வேண்டும் என முட்டி மோதுகிறார்களாம். இதனிடையே இது குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுத்து நல்லதொரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications