காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ஸ்டாலின்! ஒரு இடம் விடாமல் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு
சென்னை: மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இரவு முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் நிலவரத்தை தொலைபேசியில் கேட்டறிந்த அவர் விடிந்தும் விடியாமலும் சென்னையை ஒரு ரவுன்டு அடிக்க புறப்பட்டு விட்டார்.
புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

2 நாள் பயணம்
தென்காசி, ராஜபாளையம், மதுரை என 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நேராக எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், இரவு முழுவதும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என மாற்றி மாற்றி தொலைபேசி மூலம் பேசி நிலவரத்தை கேட்டறிந்து வந்தார்.

நேரில் ஆய்வு
இந்நிலையில் இன்று காலை விடிந்தும் விடியாமலும் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் மழை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.என்.நேரு ஆகியோர் உடன் பயணித்து வருகின்றனர்.கார் செல்ல முடியாத தெருவிற்குள் நடந்தே சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பொருட்கள் வழங்கி உதவி
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, அரிசி, பிரட், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்திருந்தால் சென்னை மாநகராட்சி மேயரையும், மூத்த அமைச்சர்களையும் ஆய்வுக்கு அனுப்பிவிட்டு அவர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்ய விரும்பாத முதல்வர் ஸ்டாலின், தாமே நேரடியாக களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.

இயல்பு நிலை
ஓரிரு நாட்களுக்குள் புயல் பாதிப்புகளை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை முதல்வர் முன்னெடுத்துள்ளார். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவாகினும் முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக களமிறங்கி வருவது கவனிக்கத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications