கிங் மேக்கர்.. டெல்லிக்குச் செல்லும் ஸ்டாலின்! காத்திருக்கும் மெகா ஆஃபர்..’அவங்களுக்கும்’ அழைப்பாமே!
சென்னை: பாஜகவுக்கு எதிராக களம் கண்ட இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அங்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
18வது மக்களவைக் காண 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜூன் நான்காம் தேதியான இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக 375 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் அப்படியே மாறி இருக்கிறது. பெருவெற்றி பெறும் என நினைக்கப்பட்ட பாஜக தற்போது தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. அந்தக் கட்சி கூட்டணி தற்போது 295 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. டெல்லி இமாச்சல பிரதேசம் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம் தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் அக்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவில் தான் பாஜக இனி ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையே ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்தக் கூட்டணி தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. 230க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் நிதிஷ்குமார் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அழைத்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அதற்கான பேச்சு வார்த்தைகளை அந்த கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவரான சரத் பவர் தொடங்கி இருக்கிறார். நிதீஷ் குமாரிடமும் சந்திரபாபு நாயுடுவிடமும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தற்போது பாஜக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில் அந்த கூட்டணி தான் முதலிடத்தில் இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருக்கின்றனர்.
2004ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மற்றும் புதுவையில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி புறப்பட்டுச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே இந்தியா கூட்டணி தலைவர்கள் முகாமிட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications