Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கும் சளைத்தவரல்ல அரசு பள்ளி மாணவர்கள்! விண்வெளியிலும் இனி ’நம்ம’ ஆட்சி! முக ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ள நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

mk stalin higher education Tamil Nadu

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," அண்ணாவின் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் தமிழ்நாட்டின் அறிவு கண்களான மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

மாணவர்கள் உயர்ந்தால் ஆசிரியர்களுக்கும், குழந்தைகள் உயர்ந்தால் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தற்போது தமிழ்நாட்டில் இருந்து 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எதிர்கால சொத்துக்களை உருவாக்கி சமூகத்திற்கும் நாட்டிற்கும் அளித்துள்ள ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவாற்றல் உலகத்திற்கே பயன்பட போகிறது. உலகின் அறிவியல் சொத்தாக உள்ள மாணவர்களை பார்க்கும்போது உண்மையிலேயே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்.

அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் பயில இருக்கிறார்கள். ஐஐடி , ஐஐஎம் மட்டுமல்ல, தேசிய சட்டப் பயிற்சி நிலையம், விண்வெளி துறையின் உயர்ந்த கல்வி நிறுவனங்களிலும் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளார். அந்த மாணவர்களின் முதல் முறை பயணச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்

வாய்ப்பு கிடைத்தால் எந்த உயரத்தையும் தமிழக மாணவர்கள் எட்டிப் பிடிப்பார்கள். விண்வெளியிலும் அரசு பள்ளி மாணவர்கள் இனி ஆட்சி செலுத்துவார்கள். அறிவாற்றல் இருந்தால் எந்த தடையும் வெல்லலாம் மாணவர்களை பாதுகாக்க வேண்டுமென தைவான் மலேசிய நாட்டு தூதர்களிடம் ஒரு முதலமைச்சர் ஆக நான் வலியுறுத்தி இருக்கிறேன். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் நமது மாணவர்கள் இன்று முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17% அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்.

2023ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்தாண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது. நான் முதல்வன்' இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்கள் உள்ளன. தேசிய சட்டப்பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+