Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஸ் டூ டென்னிஸ்! அடித்து ஆடும் "ஸ்டாலின்".. விளையாட்டு போட்டிகளில் உலக அளவில் கவனம் பெற்ற தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடித்து ஆடுகிறார் முதல்வர் ஸ்டாலின். அடிக்கும் ஒவ்வொரு பந்தும் சிக்ஸ்சர். முதல்வராகப் பதவியேற்ற ஒரே ஆண்டில், 'ஒலிம்பியாட்' சர்வதேச போட்டியைச் சென்னையில் நடத்தி உலக அரங்கை உற்றுநோக்க வைத்தார்.

உக்ரைன் போரில் உருக்குலைந்து போய் நின்ற ரஷ்யா 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை நடத்துமா? நடத்தாதா? எனக் கையை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் போட்டிக் களத்தைச் சென்னைக்கு மாற்றிக் காட்டியதன் மூலம் ஸ்டாலின் சாமர்த்தியம் சர்வதேச அரங்கில் எதிரொலித்தது.

ஏறக்குறைய 200 நாடுகள். வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என்று 2500 பேர் சென்னையை மையமிட்டு ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 92 கோடியே 13 லட்சம் வரை இதற்காகச் செலவிடப்பட்டுள்ளது.

Chief Minister Stalin is working to bring Tamil Nadu sports persons at par with international standards.

"கொரோனா அலை முடிந்த பிற்பாடு அரசின் நிதிச்சுமை கூடி இருந்தது. அந்தநேரத்தில் ஒரு அரசு மருத்துவத்துறைக்கே அதிக நிதியைச் செலவிடும். அந்த தருணத்தில் விளையாட்டுத்துறைக்கு 100 கோடியைச் செலவிடுவதற்கு ஸ்டாலின் முன்வந்தது மிகப் பெரிய விஷயம்" என்கிறார் விளையாட்டுத்துறை விமர்சகர் ரகு.

Chief Minister Stalin is working to bring Tamil Nadu sports persons at par with international

இவர் சொல்வது சரிதான். மாபெரும் 'ஒலிம்பியாட்' நிகழ்வு நடந்து முடிந்த அதே சூட்டுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் இறுதிப்போட்டி இப்போது களைக்கட்ட இருக்கிறது. மின்னல் வேலத்தில் செயல்படுவதால்தான் விளையாட்டுத்துறை அமைச்சரை ஸ்டாலின், 'ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார் மெய்யநாதன்' என்று பாராட்டி இருக்கிறார்.

ஸ்டாலின் விளையாட்டு ஆர்வம்

நம்முடன் தொடர்ந்து பேசிய ரகு, "இயல்பாகவே ஸ்டாலினுக்கு ஸ்போர்ட்ஸ் ஏரியாவில் ஈடுபாடு அதிகம். அவரே இளைஞர்களை போல சைக்கிளிங் செய்கிறார். அதுவும் மகாபலிபுரம் வரை பயணிப்பது எளிதல்ல. அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஜிம்முக்குப் போய் வீடியோக்களை வெளியிடுகிறார். ஒரு முதல்வர் இப்படி Sports activities இல் அதிகம் கவனம் செலுத்துவது அரிதான விஷயம்" என்கிறார்.

மேலும் அவர், "சர்வதேச ஒலிம்பியாட் போட்டியைச் சென்னையில் நடத்தியது பெரிய சாதனை. அதுவும் கொரோனா இடையே நடத்தி முடித்தது சாதனை. ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வீரர்கள் வருவதற்கே தயங்குவார்கள். அந்த நெருக்கடியைத் தமிழ்நாடு அரசு சரியாகச் சமாளித்து வெற்றி பெற்றுள்ளது.
இப்போது அதே மின்னல் வேகத்தில் 2018 முதல் 2021 வரையான மொத்தம் 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு 16.28 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை உடனடியாக கொடுத்திருக்கிறார். இந்த வேகம் விளையாட்டு வீரர்களுக்கு மிகமிகத் தேவை. அப்போதுதான் உற்சாகம் பெறுவார்கள்.

அதன் அடையாளமாகத்தான் வாள் வீச்சில் வென்ற பவானி தேவிக்கு உடனேயே 5 லட்சம் வழங்கினார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 3 கோடி. வெள்ளி வென்றால் 2 கோடி. வெண்கலம் வென்றால் 1 கோடி என ஸ்டாலினின் அறிவிப்புகள் வியக்க வைக்கின்றன.

அடுத்து சென்னையில் Beach Olympics போட்டியை நடத்தப்போவதாக்கக்கூட அறிவித்திருக்கிறார். இதனால் சென்னை சர்வதேச விளையாட்டுக் களமாக மாறி வருகிறது" என்கிறார் ரகு.

Chief Minister Stalin is working to bring Tamil Nadu sports persons at par with international standards.

டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு தலா 5 லட்சம் வீதம், 55 லட்சம் ரூபாய் வழங்கியது இந்த அரசு.

ஸ்டாலினின் விளையாட்டு ஆர்வம்

ஸ்டாலினுக்கு இயல்பாகவே விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகம். அதை அவரே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருமுறை ஸ்டாலின், "நானும் கிரிக்கெட் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கத் தவறமாட்டேன். நான் பள்ளிகாலம் தொட்டு கிரிக்கெட் ஆடுபவன். மேயராக இருந்தபோதே கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு ஆடி இருக்கிறேன்" என்றார்.

அன்று மேயராக கிரிக்கெட் ஆடியவர் இன்று முதல்வராக சைக்கிள் பயணம் செய்கிறார். கிரிக்கெட்டிலிருந்த அதே ஈடுபாட்டை அவர் அனைத்து விளையாட்டுகள் மீதும் பாகுபாடு காட்டாமல் செய்து வருகிறார்.
சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டபோதுகூட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 3% இடஒதுக்கீட்டை அறிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு பக்கம் Mega Sports City அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்த அரசு. தமிழ்நாட்டை 4 மண்டலங்களாகப் பிரித்து நான்கு ஒலிம்பிக் அகாடமிகளைஉருவாக்கக் கூட திட்டமிட்டுள்ளார்கள். 25 கோடி ரூபாய் மதிப்பில் 'ஒலிம்பிக் தங்கம் தேடுதல்' என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்.

Chief Minister Stalin is working to bring Tamil Nadu sports persons at par with international standards.

வடசென்னைக்கு உரிய மரியாதை

இதற்கு முந்தைய அரசுகள் தென்சென்னையை மையமாக வைத்தே விளையாட்டுக் களத்தை மேம்படுத்தி வந்தன. ஆனால் ஸ்டாலின் வடசென்னையை விளையாட்டுத்துறையின் ஒரு பகுதியாக மாற்ற இருக்கிறார். 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை விளையாட்டு வளாகத்தை அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் பல 'சார்பட்டா பரம்பரை' உருவாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+