பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்.. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - கொந்தளிக்கும் அண்ணாமலை
மதுரை: ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தி விட்டதாகவும், இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பிரமரின் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார். இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லிக்கு கூட செல்லாமல் நமக்காக ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.

அப்படி இருக்கும்போது பிரதமரை வரவேற்பது என்பது தமிழக முதல்வரின் தலையாயக் கடமை. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் அரசியல் செய்துள்ளார். ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் ஊட்டிக்கு சென்று விட்டார்.
தொகுதி மறுசீரமைப்பை காரணம் காட்டி ஊட்டியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன. தனது கடமையை முதல்வர் செய்ய தவறிவிட்டார். இதனை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக மக்களுக்காக பணியாற்ற வந்த பிரதமரை முதல்வர் அவமானப்படுத்தி உள்ளார். அதற்காக, தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பிரதமர், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். முதல்வரின் தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். இதை ஒரு காரணமாக வைத்து, ஊட்டியில் முதல்வர் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இன்று முதல்வர் வருகை தந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. ராமேஸ்வரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி.
அதனால்தான் மேடைக்குப் பின்னால் இருந்தேன். கோவிலில் இருந்தேன். அரசு நிகழ்ச்சி இல்லாமல் எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் நான் இருந்தேன். மக்களின் வரிப்பணத்தில் நடக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் எனக்கு வேலையில்லை.
அதனால்தான் பாஜகவின் பிரதிநிதிகளான மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். அதில் நான் இருப்பது தவறு. பாஜக தலைவர் போட்டியில் நானில்லை. மற்ற கட்சிகள் எப்படி கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு நமது முதல்வர் வேலை இல்லாமல் இருக்கிறார்.
எங்கிருந்தாலும் நான் எனது பணியை செய்யப் போகிறேன். பதவி வந்தாலும் மாற மாட்டேன்; வராவிட்டாலும் மாற மாட்டேன் என்றார்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications