சோசியல் மீடியாவில் சாதி, மத மோதல்... கட்டப்பஞ்சாயத்து கூடாது.. முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்
சென்னை: சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவல் மரணங்களை தடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளிக்க மக்கள் வந்தால் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,காவல்துறை அரசுத்துறை செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு தந்து பணியாற்ற வேண்டும். சரியாக பின்பற்றி வருவதால் அமைதி தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. காவல்துறையின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது. குற்றங்கள் குறைவு என்று எண்ணிக்கை விட குற்றங்களை நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் துறையாக காவல் துறை செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரிய பிரச்சினையாக இல்லை.சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் காவல்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும் போது காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் பெண்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டிவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மீதான புகார்களில் நடுநிலையாக செயல்படவேண்டும். கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய விஷயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க மக்கள் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது எனவும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பெரிய நிகழ்வாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். குற்றம் செய்ததற்கான ஆதரங்கள் இருந்தால் மட்டும்தான் கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications