சேலம் செல்ல நான் ரெடி! நீங்க ரெடியா? எனது கண்கள் உங்கள் முகங்களை தேடும்! ஸ்டாலின் உற்சாகம்!
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் செல்ல நான் ரெடி! நீங்க ரெடியா? எனக் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக இளைஞரணி நிர்வாகிகளை பார்க்கும் போது தனக்குள் உற்சாகமும் - புத்தெழுச்சியும் பிறப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;

''இளைஞரணியின் எழுச்சிமிகு இரண்டாவது மாநாடு சேலத்தில் சனவரி 21-ஆம் நாள் நடைபெற இருக்கிறது. சேலத்துக்கு வர நான் தயாராகிவிட்டேன். நீங்கள் தயாராகிவிட்டீர்களா? என்னைப் பார்க்கும்போது உங்களுக்குள் எப்படி ஒரு உற்சாகமும் புத்தெழுச்சியும் பிறக்கிறதோ...
அதேபோல் உங்களைப் பார்க்கும்போது எனக்குள்ளும் உற்சாகமும் - புத்தெழுச்சியும் பிறக்கிறது! கழக உடன்பிறப்புகளான உங்களின் முகங்களைப் பார்ப்பதும் - நீங்கள் எழுப்பும் கொள்கை முழக்கங்களைக் கேட்பதும் தான் - எனக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும் விஷயங்கள்!
இன்று நேற்று அல்ல; 1980ல் இருந்தே இது எனக்கு பழக்கமாகிவிட்டது! எப்போது தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கி, என்னிடம் ஒப்படைத்தார்களோ, அன்றில் இருந்து, தொண்டனுக்குத் தொண்டனாக, உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பாக தான் செயல்பட்டு வருகிறேன். இன்றைக்குக் கூட, கழகத் தலைவராக அல்ல, தலைமைத் தொண்டனாகத்தான் செயல்படுகிறேன்.
கொள்கை உறவு உடன்பிறப்புகளின் மாநாடு தான் சேலம் மாநாடு. 2007ஆம் ஆண்டு திக்கெட்டும் புகழும் திருநெல்வேலிச் சீமையில்
இளைஞரணியின் முதல் மாநாட்டை நான் தலைமை வகித்து நடத்திக் காட்டினேன். இப்போது 2024ஆம் ஆண்டு சீர்மிகு சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி சிறப்போடு ஏற்பாடு செய்து நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்.
இளைஞரணி மாநாட்டின் நோக்கம் மாநில உரிமைகளை வென்றெடுப்பது என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி திட்டமிட்டிருக்கிறார். மாநில உரிமைகளைக் காப்பதுதான் இந்தியாவைக் காப்பது! அந்த வகையில் இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்திய நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும், இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும்; அமையும்! இதற்கெல்லாம் தொடக்க மாநாடாகச் சேலம் மாநாடு அமையப் போகிறது.
எனது உடன்பிறப்புகளே! கழக உடன்பிறப்புகளே! கலைஞரின் உடன்பிறப்புகளே! சேலம் செல்ல நான் தயாராகிவிட்டேன்! நீங்களும் தயாராகிவிட்டீர்களா? சேலத்தில் எனது கண்கள், உங்களது முகங்களைத்தான் தேடும்! சேலத்தில் சந்திப்போம்!''
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications