வணக்கம் நான் ஸ்டாலின் பேசுறேன்! மின்னகம் சேவை மையத்திற்கு வந்த அழைப்பை எடுத்து பேசிய முதல்வர்!
சென்னை : சென்னையில் பல்வேறு மின் திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் வாரிய குறைதீர் அழைப்பு மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், பிரத்யேகமாக மக்கள் புகார் அளிக்க 9498794987 என்ற செல்போன் எண்ணையும் அறிமுகப்படுத்தினார்.

மின்னகம்
இந்த மையத்தில் 3 ஷிப்ட்களில் 195 பேர் பணியில் ஈடுபடஉள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை கணினிமூலம் பதிவு செய்து, தொடர்புடைய அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து, துரித நடவடிக்கை மேற்கொள்வர். மேலும்,புகார்தாரரின் செல்போனுக்குபுகார் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

புகார்கள் மீது நடவடிக்கை
மக்கள் அளித்த புகார் சரி செய்யப்பட்டவுடன், அதுகுறித்த தகவலும் புகார் அளித்த நபர்களும் உடனடியாக அனுப்பப்படும் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கசமூக ஊடகப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை ஆயிரக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இன்னிலையில் சென்னை மின்னகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார் சென்னையில் பல்வேறு மின் திட்டப் பணிகளை துவக்கி வைத்த முதல்வர் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் வாரிய குறைதீர் அழைப்பு மையமான மின்னகத்தின் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பொதுமக்களுடன் பேச்சு
அப்போது மின்னகத்திற்கு வந்த அழைப்புகளை ஏற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், வணக்கம் நான் முதல்வர் பேசுகிறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை' என கேட்டார். இதனால் எதிர்முனையில் இருந்த பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications