இலங்கைக்கு ரூ.50 லட்சம் உதவி! சட்டசபையில் உறுதியளித்த ஓபிஎஸ்! புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
சென்னை : இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் சார்ந்திருக்கும் குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் தர இருப்பதாகக் கூறிய நிலையில், ஓபிஎஸ் நிதியுதவி செய்ய முன்வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.
எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, விலைவாசி விண்ணை முட்டியுள்ளது. அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது.

சிறப்பு தீர்மானம்
தற்போது இலங்கைக்கு சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித பதிலோ, அனுமதியோ அளிக்காத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது இலங்கைக்கு சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித பதிலோ, அனுமதியோ அளிக்காத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தீர்மானத்தில் வலியுறுத்தப்படுள்ளது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்," இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது எனவும், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்" என பேசினார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர தீர்மானத்தில் வலியுறுத்தப்படுள்ளது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்," இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது எனவும், இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதய தயார்" என பேசினார்.

ஓபிஎஸ் நிதியுதவி
இலங்கைக்கு உதவிட அனுமதி கோரிய தீர்மானம் குறித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேசிய நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்,"இலங்கை மக்களுக்கு தான் சார்ந்திருக்கும் குடும்பத்தின் ( அதிமுக) சார்பில் 50 லட்சம் ரூபாய் தர தயார் எனவும், மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் தீர்மானம் இது" என்றார்.

முதல்வர் நன்றி
மேலும் இந்த தீர்மானத்தை அதிமுக முழு மனதோடு வரவேற்கிறது எனவும், தமிழக அரசின் முயற்சிகளுக்கு அதிமுக ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பேசினார். இதனையடுத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இலங்கைக்கு அளிக்கும் நிவாரண உதவிகளுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் நிதியுதவி செய்ய முன்வந்ததற்கு நன்றி எனவும், தன்னைப்போல பிறரும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார் என புகழாரம் சூடினார். மேலும் இந்த தீர்மானத்தை அதிமுக முழு மனதோடு வரவேற்கிறது எனவும், தமிழக அரசின் முயற்சிகளுக்கு அதிமுக ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் பேசினார். இதனையடுத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இலங்கைக்கு அளிக்கும் நிவாரண உதவிகளுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் நிதியுதவி செய்ய முன்வந்ததற்கு நன்றி எனவும், தன்னைப்போல பிறரும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார் என புகழாரம் சூடினார்.












Click it and Unblock the Notifications