ஈரோடு கிழக்கில் முதல்வர் ஸ்டாலின் ஒருநாள்தான் பிரச்சாரம்..பயணத்தில் திடீர் மாற்றம்.. காரணம் என்ன?
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் பிரசாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பிரசார சுற்றுப்பயணத்தில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெராவின் எதிர்பாராத மரணம் இப்போது இடைத்தேர்தலை அந்த தொகுதி மக்களுக்கு கொண்டு வந்துள்ளது.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட்டை ஒதுக்கிய கையோடு வேட்பாளரை அறிவிக்கும் முன்னதாகவே , பிரச்சார களத்தில் இறங்கியது திமுக. தேர்தல் பணிக்குழுவில் 12 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 32 பேர் நியமிக்கப்பட்டனர். பணிக்குழுவில் பெயர் இல்லாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் களமிறக்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் திமுகவினரை காண முடிகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்குள்ள கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினரிடம் தேர்தல் பணி நிலவரத்தை கேட்டறிந்து வருகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது பங்குக்கு வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். கையில் எய்ம்ஸ் செங்கல் இந்த முறையும் இடம்பெற்றிருந்தது.
24,25ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டுமே ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னையில் இருந்து நாளை மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். சனிக்கிழமை காலையில் வீதி வீதியாக சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 25ஆம்தேதி வாக்கு சேகரிக்கும் சுற்றுப்பயண விவரம்: சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். பேசும் இடம்-சம்பத் நகர் ,வழி- பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பஸ் நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி. 2. பேசும் இடம்-காந்தி சிலை வழி-கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு. 3. பேசும் இடம்-அக்ரஹாரம் காலை 11 மணி, வழி- பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி. மதியம் சக்தி சுகர்ஸ், சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி, பேசும் இடம்-முனிசிபல் காலனி வழி-மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா. பெரியார் நகர் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு தன்பிறகு சக்தி சுகர்ஸ் சென்றுவிட்டு கோவை வழியாக சென்னை திரும்புகிறார். இடைத்தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் ஒரு நாளாக குறைக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications