தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கு அடையாளம் அழகு முத்துகோன்! முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் வீரரான மாவீரன் அழகுமுத்து கோனின் 313வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் நேரில் வந்து அழகு முத்துகோன் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் திமுகவில் உள்ள யாதவ சமுதாய முக்கியப் பிரமுகர்களான அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை துணை மேயர் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் யாதவர் சமுதாயத்தினரின் வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட முடியாத நிலை உள்ளது. இதனால் தான் திமுக, அதிமுக, உட்பட அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழகு முத்துகோன் சிலைக்கு தவறாமல் மரியாதை செலுத்தப்படுகிறது.
அரசு சார்பில் மரியாதை செலுத்தியது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது; ''தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ் மங்காது ஒளி வீசிடும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டால் உயிர்ப்பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்த நிலையில் "அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம்" என்று கம்பீரமாக முழக்கமிட்டவர் வீரன் அழகுமுத்துக்கோன் என்பது வரலாறு. இதனால் தான் இவர் மாவீரன் அழகு முத்துகோன் என அழைக்கப்படுகிறார்.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications