சோனியா காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் மதிய விருந்து! சென்னையில் குவியும் காங்கிரஸார்!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தரும் சோனியா காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மதிய விருந்து கொடுக்கிறார்.
இந்த விருந்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே நாளை காலை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சோனியா சந்திக்கவுள்ளதால் காங்கிரஸார் சென்னையில் குவிந்து வருகின்றனர்.

டெல்லி டூ சென்னை: ஒன் இந்திய தமிழ் ஏற்கனவே கூறியிருந்ததை போல் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வரும் சோனியா காந்தியை வரவேற்க தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் எழுச்சிமிகு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி இல்லத்திலிருந்து இன்று மாலை 6.45 மணிக்கு புறப்படும் சோனியா காந்தி இரவு 7.25 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைகிறார்.
இரவு சென்னை வருகிறார்: அங்கிருந்து இரவு 7.55 மணிக்கு விஸ்டாரா விமானம் மூலம் சென்னை புறப்படும் சோனியா காந்தி இரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸார் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக்கொண்டு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுக்கச் செல்கிறார்.
காங். நிர்வாகிகளுடன் சந்திப்பு: அதன் பின்னர் நாளை காலை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்துப் பேசும் சோனியா காந்தி, தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி சில நிமிடங்கள் பேசுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.
முதல்வர் மதிய விருந்து: முதலமைச்சர் ஸ்டாலின் கொடுக்கும் மதிய விருந்து நிகழ்ச்சி அவரது சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் நடைபெறுகிறதா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறதா என்ற விவரம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு ப்ரியங்கா காந்தி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications