Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் மனைவியாக இருந்தாலும் தலைக்கனம் இல்லாத எளிமை.. துர்கா ஸ்டாலினை பாராட்டிய இந்துமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: துர்கா ஸ்டாலின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். வெளிப்படையான பேச்சு பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலான பக்தி பிடிக்கும். தன் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யக் கூடியவர் என்று எழுத்தாளர் இந்துமதி பாராட்டியுள்ளார். முதல்வரின் மனைவியாக இருந்தாலும் தலைகனம் இல்லாதவர் ஆண்டவன் அவரை உயரத்தில் உட்கார வைத்திருப்பதன் காரணமும் இதுதான் என்றும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்துமதி.

நவராத்திரி பண்டிகை உறவையும் நட்புக்களையும் ஒன்று சேர்க்கும் பண்டிகை. வீடுகளில் கொலு வைத்து கொண்டாட்டமாக இசைக்கச்சேரிகள் நடைபெறும். அம்மனை வணங்கும் அதே நேரத்தில் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து தாம்பூலமும் பரிசுகளும் கொடுத்து அனுப்புவது வழக்கம். தமிழ்நாட்டில் கோவில்களில் மட்டுமல்லாது பிரபலங்களின் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடினர்.

Chief Ministers wife Durga Stalin visits writer Indhumathi house Saraswathi Pooja festival

எழுத்தாளர் இந்துமதி தனது வீட்டில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழாவில் பங்கேற்க வந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பக்கத்தில் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எழுத்தார் இந்துமதி.

இவ்வளவு எளிமையான ஒரு பெண்மணி. எப்போதும் முதலமைச்சரின் மனைவி first lady என்கிற எண்ணமோ, தலைக் கனமோ சிறிது கூட இன்றி பழகுபவர்.இன்று நேற்று இல்லை.கிட்டத் தட்ட பத்துப் பதினைந்து வருடப் பழக்கம். கலைஞர் இருந்த போதிலிருந்து, இவரது கணவர் துணை முதல்வராக இருந்த போதிலிருந்து பழக்கம். எதையும் வெளிப்படையாகப் பேசியே பழக்கப் பட்ட நான் இவரது கணவரான ஸ்டாலினை முதலமைச்சராக அறிவிக்காததற்காக அவரிடம் சண்டை கூடப் போட்டிருக்கிறேன்.

அப்போதிலிருந்தே துர்கா எனக்குப் பிடித்தமானவர். மிகவும் பிரியமானவர். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். வெளிப்படையான பேச்சு பிடிக்கும். எல்லா வற்றிற்கும் மேலான பக்தி பிடிக்கும். தன் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யக் கூடியவர். "மாமா எனக்குக் கடவுள் பக்தி உண்டு. அதனால் வீட்டில் சிறிய பூஜை அறை வைத்துக் கொள்கிறேன் " என்று கலைஞரிடமே மனம் விட்டுப் பேசியவர் தனக்கு நியாயம் என்று பட்டதை தைரியமாக செய்யக் கூடியவர். ( முதல்வரும் பெண்களுக்கான மரியாதையும் , உரிமையும் மறுக்கக் கூடியவர் இல்லை. மனைவியே ஆனாலும் மாற்று கருத்து கொண்டிருந்தால் அதை மதிப்பவர்) அப்படிப் பட்ட தமிழ் நாட்டின் முதல் பெண்மணி, அப்படிப் பட்ட தமிழ் நாட்டின் முதல் பெண்மணி,

முதலமைச்சரின் மனைவி எளிமைக்கும் அன்புக்கும் ஒரு சிறிய உதாரணமே இன்று நடந்த நிகழ்ச்சி. இன்று சரஸ்வதி பூஜை. எனக்கு மிகவும் பிடித்தமான பூஜை. அவளது கருணை, அவள் போட்ட பிச்சை இந்த எழுத்து என்று நினைப்பவள் நான்.ஆகவே வேறு எந்த பண்டிகையும் கொண்டாடாத நான் இதை மட்டும் கொண்டாடுவேன் ஆத்மார்த்தமாக கலைமகளுக்கு நன்றி சொல்லுவேன். போன சரஸ்வதி பூஜைக்கு துர்கா அவர்களும் ஜெயந்தியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். இன்று காலை போனில் பேசிய போது வருகிறேன் என்று துர்கா சொல்லியிருந்தார்கள்.

இன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சரஸ்வதியை அலங்கரித்து பூஜை முடித்து வெளியில் சென்று விட்டு களைத்துப் போய் ஆறு மணியளவில் வீடு திரும்பிய நான் இரவு உணவு தயார் செய்வதில் முனைந்தேன். இன்றிரவு வாட்ச் மேன் வரமாட்டார் என்பதால் 7மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டி விட்டு வெளிவாசல் விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு உள் கதவையும் தாழிட்டு விட்டு வந்து விட்டேன். நான் என் கணவர், மருமகள் மூவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, டைனிங் டேபிள், சமையலறையை சுத்தம் செய்து விட்டு படுக்கை அறையில் வைத்து விட்டு வந்த மொபைலை எடுத்துப் பார்த்தால் துர்கா நாலைந்து முறை போன் செய்திருக்கிறார்கள். உடனே அவர்களுக்கு போன் செய்தால்

" என்னங்க..நான் வீட்டுக்கு வந்திருந்தேங்க. கேட் பூட்டி இருந்திச்சு.லைட் எல்லாம் அணைந்திருந்திச்சு. கேட்டைத் தட்டினேன். டிரைவர் வேறு பூட்டை இழுத்து சத்தப் படுத்தினார். நாலைந்து தரம் போன் பண்ணினேன். நீங்க எடுக்கல. திரும்பி வந்துட்டேங்க.." என்றார்.
எனக்கு பகீர் என்றது. மனசு வலித்தது. ( எப்படி மறந்தேன்..)

"ஸாரிங்க ரொம்ப ஸாரி. பிளீஸ் திரும்பி வாங்க..இல்லாட்டி நான் ரொம்ப கஷ்டப் படுவேங்க." என்றேன்" சரிங்க.. நான் கோபாலபுரத்தில் தான் இருக்கேன்.மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்று வந்தேன். இதோ வரேங்க.‌" என்று ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தார். மட மட வென்று கேட்டைத் திறந்து வாசல் விளக்குகளையெல்லாம் போட்டு கேட் வரை போய் கை பிடித்து அழைத்து வந்தேன். "

Chief Ministers wife Durga Stalin visits writer Indhumathi house Saraswathi Pooja festival

உள்ளே வந்தவர் பாபாவை, சரஸ்வதியை, பூஜை அறையின் சகல தெய்வங்களையும் வணங்கினார். அவரது காலில் விழுந்து வணங்கிய என் மகன் மருமகளை ஆசீர்வதித்தார். பிறகு என் கணவரிடமும் என்னிடமும் ஆசி பெற்றார்." எல்லாம் கிடைக்குங்க.உங்களுடையது மாதிரி நிஜமான எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கிடைக்காதுங்க ‌ அது கிடைத்த நாங்க பாக்கியசாலி " என்று அவர் கூறியதைக் கேட்ட நான் சிலிர்த்துப் போனேன்.

எப்பேர்ப்பட்ட மனுஷி! தமிழகத்தின் முதல் பெண்மணி. நான் ரொம்ப சாதாரண மனுஷி. ஆத்மார்த்தமான அன்பு தவிர வேறு இல்லாதவள். அந்த அன்புக்காக, அந்த அன்பை மதித்து வீடு தேடி வந்து பூட்டிக் கிடந்த கதவைத் தட்டி, போனில் அழைத்து பதிலற்று திரும்பிப் போனவர் என் வேண்டுகோளை ஏற்று திரும்பி வந்தார் என்றால்....How great she is..!

சாதாரணமான நமக்கே கோபம் வரும். EGO தலைக்கு ஏறும். ஆனால் அவர்...! அந்த எளிமை.. மதிக்கும் தன்மை.. அன்பைப் புரிந்து கொண்டு, அதே அன்பைத் திருப்பித் தந்து. நீங்கள் உயர்ந்து நிற்பதன் காரணம் இதுதான். ஆண்டவன் உங்களை உயரத்தில் உட்கார வைத்திருப்பதன் காரணமும் இதுதான். எப்போதும் உங்களை எனக்குப் பிடிக்கும். இப்போது அதிகம் பிடிக்கிறது. I LOVE YOU MORE FOR YOUR GREATNESS.. GOD BLESS YOU MY DEAR என்று பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் இந்துமதி. இந்த பதிவு திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+